மேலும் அறிய

Cristiano Ronaldo Record: உலக்கோப்பையில் புதிய உலக சாதனையை படைத்த ரொனால்டோ: அடுத்த இடத்தில் மெஸ்ஸி...!

Cristiano Ronaldo Record: கால்பந்து போட்டியின் நாயகனும் போர்ச்சுகல் அணியின் ஸ்டார் ப்ளேயருமான கிரிஸ்டியானோ ரொனால்டோ நேற்று நடந்த போட்டியில் அடித்த கோல் மூலம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

குரூப் எச் பிரிவில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணிக்கும், தரவரிசையில் 61-ஆவது இடத்தில் உள்ள கானா அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

22ஆவது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.  நேற்று மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது. இதையடுத்து, 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென்கொரியாவும், உருகுவேயும் மோதின. இந்த ஆட்டம் ட்ரா ஆனது.

இந்நிலையில், போர்ச்சுகல்-கானா இடையிலான ஆட்டம் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழவில்லை. பந்து போர்ச்சுகல் வசமே அதிகம் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 65ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இதையடுத்து 73-ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரே அஜியூ கோல் அடித்தார்.  பின்னர், போர்ச்சுகல் அணி சார்பில் ஜாவோ ஃபெலிக்ஸ் 78ஆவது நிமிடத்திலும், ரஃபேல் லியாவ் 80ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். கானா அணியின் புகாரி 89-ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.

90 நிமிடங்கள் முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கூடுதல் நேரத்திலும் கானா அணி கோல் எதுவும் அடிக்காததால் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரொனால்டோ உலகச் சாதனை

இதன்மூலம்,  தொடர்ந்து ஐந்து உலகக் கோப்பையில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.  அதாவது, 2006, 2010, 2014, 2018 மற்றும் 2020 என 5 உலகக் கோப்பை எடிஷனில் தொடர்ந்து கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் ரொனால்டோ. இந்தப் பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 4 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஸ்டேடியம் 974 (Stadium 974)
இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை அமர முடியும். கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்பு சரக்கு கண்டெய்னர்களால் இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 974 கண்டெய்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேடியம் இதுதான். இந்தப் போட்டி முடிந்ததும் இந்த ஸ்டேடியம் அகற்றப்பட்டு விடும். இங்கு மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்

Embed widget