FIFA World Cup 2022: மாறி மாறி வாய்ப்புகளை தவறவிட்ட டென்மார்க், துனிசியா அணிகள்... டிராவில் முடிந்த ஆட்டம்!
சர்வதேச தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கும், 30ஆவது இடம் வகிக்கும் துனிசியாவும் க்ராஸ்பார் எஜூகேஷன் சிட்டி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் டென்மார்க் - துனிசியா அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலையில் டிராவில் முடிந்தது.
2022 உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ள துனிசியா அணிகள் மோதின.
சர்வதேச தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கும், 30ஆவது இடம் வகிக்கும் துனிசியாவும் க்ராஸ்பார் எஜூகேஷன் சிட்டி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றான துனிசியா ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், மூன்றாவது மற்றும் 12ஆவது நிமிடங்களில் கிடைத்த கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டது.
தொடர்ந்து 24ஆவது நிமிடத்தில் டெம்ன்மார்க்கின் க்ரிஸ்டனுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது இந்நிலையில், போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
View this post on Instagram
இந்நிலையில் விறுவிறுப்பாகத் தொடங்கிய இரண்டாவது பாதியில் கிடைத்த கார்னர் வாய்ப்புகளை டென்மார்க் தவறவிட்டது.
தொடர்ந்து இரு அணிகளுக்கும் தங்களுக்கு கோல் அடிக்கக் கிடைத்த பல வாய்ப்புகளையும் மாறி மாறி தவற விட்ட நிலையில், 0-0 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில் டென்மார்க், துனிசியா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. சி மற்றும் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் மூன்றாவது போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ - போலந்து அணிகள் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய கடைசி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆஸ்திரெலியா அணிகள் மோதுகின்றன.