மேலும் அறிய

FIFA Worldcup 2022: உலகக்கோப்பை கால்பந்து 2வது சுற்று இன்று தொடக்கம்..! யாருடன் யார் மோதல்..?

22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் தொடங்க உள்ளது.

22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

2வது சுற்று ஆட்டம்:

இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

2ம் சுற்றுக்கு யார்..? யார்..?

32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்தது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது.

அந்தப் பட்டியலை காண்போம். ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த 3 முறை பைனலுக்கு முன்னேறிய நெதர்லாந்து, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் ஆகிய நாடுகள் குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடியது. நெதர்லாந்து 2 ஆட்டங்களிலும், செனகல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. நெதர்லாந்து ஓர் ஆட்டத்தில் டிராவும், செனகல் 1 ஆட்டத்தில் தோல்வியும் அடைந்தது. நெதர்லாந்து 7 புள்ளிகளுடனும், செனகல் 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது.

பி பிரிவு
பி பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, 3 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வெற்றியும், ஓர் ஆட்டத்தில் டிராவும் செய்து 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் அமெரிக்கா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

சி பிரிவு 
சி பிரிவில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், போலந்து அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினா 3 ஆட்டங்களில் விளையாடி 2 ஆட்டங்களில் வெற்றியும் ஒரு தோல்வியையும் பெற்றது.

டி பிரிவு
டி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் டாப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ளன.
இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. துனிசியா, டென்மார்க் ஆகிய அணிகள் வெளியேறின.

இ பிரிவு
இந்தப் பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் டாப்  2 பிரிவில் உள்ளன. 

எஃப் பிரிவு
இந்தப் பிரிவில் மொராக்கோ 7 புள்ளிகளுடனும், குரோஷியா 5 புள்ளிகளுடனும் டாப் 2 பிரிவில் இடம்பிடித்தன. பெல்ஜியம், கனடா ஆகிய அணிகள் வெளியேறின.

FIFA WC 2022 Qatar: உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது ஜெர்மனி அணி.. காரணம் ஜப்பானா?

ஜி பிரிவு
ஜி பிரிவில் பிரேசில் அணி 6 புள்ளிகளுடனும் சுவிட்சர்லாந்து அணி 3 புள்ளிகளுடனும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

எச் பிரிவு
குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல் (6 புள்ளிகள்),  தென்கொரியா (4 புள்ளிகள்) ஆகிய அணிகள் டாப் 2 இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இன்று தொடக்கம்
இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்தும், பி பிரிவில் 2ஆவது இடம் பிடித்த அமெரிக்காவும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் மோதுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue | Vellore DMK Issue | ”நாளைக்கு நீ கடைபோட மாட்ட” திமுகவினர் அட்ராசிட்டி? நிகழ்ச்சியில் நடந்த சண்டைTrump Request Elon Musk | ”சுனிதாவை காப்பாத்துங்க..”உதவி கேட்ட ட்ரம்ப் உடனே இறங்கிய எலான் மஸ்க் | Sunita Williams

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
DMK Vs ADMK: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
DMK Vs ADMK: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
Governor Questions CM: காந்தி இன்றும் கேலி செய்யப்படணுமா.? முதலமைச்சருக்கு ஆளுநர் கேள்வி
காந்தி இன்றும் கேலி செய்யப்படணுமா.? முதலமைச்சருக்கு ஆளுநர் கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
CSK New Jersy: சென்னை ரசிகர்களே! சிஎஸ்கே ஜெர்சியில் அதிரடி மாற்றம்! 2025ல் இப்படித்தான் வருவாங்க
CSK New Jersy: சென்னை ரசிகர்களே! சிஎஸ்கே ஜெர்சியில் அதிரடி மாற்றம்! 2025ல் இப்படித்தான் வருவாங்க
Embed widget