மேலும் அறிய

கோப்பையை வென்று கொடுத்த கால்.. அற்புத தருணத்தை அப்படியே பிடித்துவைத்த அர்ஜென்டினா கோல்கீப்பரின் டாட்டூ..

ஒரு வேளை கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், பிரான்ஸ் அணி நிச்சயம் மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும். 

22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் அக்ரசிவ் மோடில் விளையாடிய அர்ஜெண்டினா அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அர்ஜெண்டினா என முழங்கிக்கொண்டு இருக்க அர்ஜெண்டினாவின் ஆதிக்கம் மேலும், அதிகரித்தது. 

போட்டியின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக்கினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பாக கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோல்டன் பூட் போட்டியில் பிரான்ஸின் எம்பாப்வேவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வந்தார். அவர் இந்த கோலுடன் 6வது கோல் அடித்தார்.  

முதல் பாதியில் அசத்தல்:

அதனைத்  தொடர்ந்து அக்ரசிவாக விளையாடிய அர்ஜெண்டினா அணியின் வீரரகளில் ஏஞ்சல் டி மரியா போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு இரண்டாவது கோலினை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார். போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே

அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் அர்ஜெண்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி ஷாட்டினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்க ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார். இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவாக இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது. நார்மல் எக்ஸ்ட்ரா டைமில் மேற்கொண்டு எந்த அணியும் எடுக்காததால், மேற்கொண்டு 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. 

அதில் முதல் 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி அடிக்க முயன்ற கோல்களை மிகவும் சிறப்பான முறையில் பிரான்ஸ் வீரர்கள் தடுத்து உலகத்தரமான தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அடுத்த 15 நிமிடங்களின் தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய அர்ஜெண்டினா அணியினர் சிறப்பான கூட்டு முயற்சியால் அணியின் கேப்டன், மேஜிகல் மெஸ்ஸி 108வது நிமிடத்தில் கோல் அடித்து அணியினை 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச்செய்ததுடன் போட்டியை தனக்கு சாதகமாகவும் மாற்றினார். இதனால் போட்டியின் முடிவில் அர்ஜெண்டினா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கும் என நினைக்கையில் போட்டியின் 118வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில்  எம்பாப்வே கோல் அடித்து அதகளப்படுத்த போட்டி மீண்டும் 3 - 3 என சமன் ஆனது.

இதையடுத்து கூடுதல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் முன்கள வீரர் கோலா முவானி, அர்ஜெண்டினா அணிக்கு எதிராக கோல் அடிக்க முயற்சி கொண்டார். அப்போது, அர்ஜெண்டினா கோல்கீப்பர், மார்ட்டினெஸ் லாபகமாக தனது இடது காலை நீட்டி அற்புதமாக கோலை தடுத்தார். ஒரு வேளை கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், பிரான்ஸ் அணி நிச்சயம் மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும். 

  கோப்பையை வென்று கொடுத்த கால்.. அற்புத தருணத்தை அப்படியே பிடித்துவைத்த அர்ஜென்டினா கோல்கீப்பரின் டாட்டூ..

இந்தநிலையில், அந்த அற்புதமான தருணத்தை நினைவில் கொள்ளும் வகையில், கோலை தடுத்து நிறுத்திய அதே இடத்தில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் தனது இடது காலில் புதிய பச்சை குத்தியுள்ளார். இதுகுறித்து மார்டினெஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய டாட்டூவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், “ உணர்வு உங்களை பெருமைக்கு கொண்டு செல்லட்டும்” என பதிவிட்டு இருந்தார். 

இந்த டாட்டூவை அர்ஜென்டினா கலைஞர் ஜுவான் பாப்லோ ஸ்குன்கா மார்டினெஸின் காலில் குத்தியுள்ளார். அர்ஜெண்டினா வென்ற மூன்று உலகக் கோப்பையை அடையாளப்படுத்தும் விதமாக 1978, 1986, மற்றும் 2022) குறிக்கும் வகையில் மூன்று நட்சத்திரங்களுடன் இடம் பெற்றிருந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget