Fifa world cup 2022 : கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டி! பீர் மட்டும் அனுமதி ! ஆனால் ஒரு கண்டீஷன் இருக்கு ....
ஒரு பட்வைசர் பீரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 1425 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பீர் விற்பனை செய்ய கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
பீர் மட்டும் விற்பனை :
வருகிற நவம்பர் மாதம் FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. பொதுவாக இது போன்ற உலக கோப்பை போட்டிகளில் பீர் போன்ற மதுபானங்கள் விற்க்கப்படுவது வழக்கம் . ஆனால் அரேயிய நாடுகள் சில இவ்வகையான போதை பொருட்களுக்கு எதிரானது. எனவே கத்தார் மைதானத்தில் ஆல்கஹால் நிறைந்த பீர் போன்ற போதை பானங்கள் விற்பனைக்கென எவ்வித ஏற்பாடுகளையும் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் பீர் மட்டும் விற்பனை செய்துக்கொள்ள சில கால அவகாசங்களை அந்நாடு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போட்டி துவங்கினால் பீர் கிடையாது :
வருகிற நவம்பர் மாதம் 20 ஆம் தேதி துவங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் 29 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ரசிகர்கள் பீர் வகை மதுபானத்தை மட்டும் பெற்றுக்கொள்ள பட்வைசர் பீர் நிறுவனத்துடன் கத்தார் அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் கேட் திறந்ததும் போட்டி வங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக பீர் விற்பனை மைதானத்திற்குள் துவங்கும். அதே போல போட்டி நிறைவடைந்து ஒரு மணி நேரம் வரையில் பீர் விற்பனை செய்யப்படு என கூறப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் போட்டியின் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை மத்திய டோஹாவில் உள்ள ஃபேன் ஸோனில் பீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போட்டியின் போது மைதானத்தில் பீர் வழங்கப்படாது.இதே விதிமுறைகள்தான் மற்ற உலக கோப்பை போட்டிகளுக்கும் என்கின்றனர் சிலர்.
பீர் விற்பனையை எப்படி கையாள போகிறது கத்தார்?
பீர் வழங்கப்படும் பகுதி மைதானத்தில் இருந்து சற்று தனித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பட்வைசர் பீரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 1425 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.போட்டியின் குழுநிலையின் பெரும்பாலான நாட்களில் நான்கு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன, ஆரம்ப போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்கும்.பிற்பகல் 1 மணிக்கு முன்னதாக பீர் விற்பனையை கத்தார் எவ்வாறு கையாளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. நவம்பர் 25 அன்று வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன . அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் மசூதியில் கூடுவார்கள் எனவே அதற்கான ஏற்பாடுகளையும் போட்டி குழுவினர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல வெளிநாட்டவர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு தோஹா மைதானத்திற்குள் நுழைய முடியாது. மேலும் அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் மட்டுமே வீட்டு உபயோகத்திற்காக கத்தாரில் ஷாப்பிங் செய்ய முடியும். அந்த நாட்டில் கலாச்சாரம் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம் என்கிறது விழா ஒருங்கிணைப்பு குழு.