மேலும் அறிய
குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு பயிற்றுநர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
இவ்விளையாட்டு பயிற்சி மையத்தில் குத்துச் சண்டை (BOXING) பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம்

குத்துச்சண்டை
Source : whats app
குத்துசண்டை பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கான உடற்தகுதி தேர்வு 28.04.2025- அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் குத்துசண்டை விளையாட்டானது தேர்வு
தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர், வீராங்கனைகளை தேசிய (ம) சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சமவாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை செயல்படுத்தும் விதமாக இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் குத்துசண்டை விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது .
குத்துச்சண்டை (BOXING) பயிற்றுநர்
அதன்படி , இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு குத்துசண்டை (BOXING) பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் 11.04.2025 முதல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு (ம) உடற்தகுதித்தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும் நாள் 25.04.2025 ஆகும். நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது.

என்ன கொண்டுவரவேண்டும்
மேலும் இவ்விளையாட்டு பயிற்சி மையத்தில் குத்துசண்டை (BOXING) பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான உடற்தகுதித் தேர்வு 28.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கம் விருதுநகர், வைத்து நடைபெற உள்ளது. உடற்தகுதித் தேர்விற்கு பங்கேற்க வருபவர்கள் ஆதார்அட்டை, பிறப்புச்சான்றிதழ் மற்றும் பள்ளி, கல்லுரியிலிருந்து பெறப்பட்ட போனபைடு சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட மருத்துவ கல்லூரி எதர்புறம், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7824009970 / 04562 - 252947 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,தெரிவித்துள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
கிரிக்கெட்