மேலும் அறிய

‛வருவோம்..வெல்வோம்..செல்வோம்..’ -வண்டியை கிளப்பிய பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிய எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல் இருக்கும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இந்தப் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். ஏற்கெனவே முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்து உள்ளது. ஆகவே அந்தத் தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் வழக்கம் போல் தன்னுடைய தமிழ் ட்விட்டர் பதிவுகளை இன்று முதல் தொடங்கியுள்ளார். இன்று அவர் இட்டுள்ள பதிவில்,"என் இனிய தமிழ் மக்களே, உங்களுடைய நலம் நலமறிய ஆவல். சென்னை அணி வந்தோம், வென்றோம்,சென்றோம். உங்களுக்காக வருவோம்,வெல்வோம்,செல்வோம்.. எடு வண்டிய போடு விசில" எனப் பதிவிட்டுள்ளார்.  2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமாக அமைந்த போது அதில் இம்ரான் தாஹிர் வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

ஒவ்வொரு முறையும் விக்கெட் வீழ்த்திய பிறகு தன்னுடைய ஓட்டத்தின் மூலம் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் பெற்றுள்ளார். இரண்டாவது பாதியில் சென்னை அணியின் வெற்றிக்கு இவர் முக்கியமானவராக இருப்பார் என்று கருதப்படுகிறது. இம்ரான் தாஹிர் 2019ஆம் ஆண்டு 26 விக்கெட் வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டத்தை வென்று இருந்தார். அதை போல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் அவர் செயல்பட்டால் சென்னை அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் வீராட் கோலி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget