IND vs SA Tickets: இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி... டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ற நபர்! கொத்தாக தூக்கிய போலீஸ்!
நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான 2,500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை 11,000- க்கு பிளாக்கில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 - லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 31-வது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (அக்டோபர் 31) விளையாடி வருகின்றன.
தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா:
வரும் நவம்பர் 05- ஆம் தேதி தொடர் வெற்றிகளை பெற்று வலுவான அணியாக இருக்கும் இந்திய அணியும், ஒரு தோல்வி 5 வெற்றிகளுடன் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது. அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகளுக்கு எப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குமோ அதேபோல், தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், அன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே தீர்ந்து விட்டன. ஆனாலும், இந்த போட்டியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களிடன், அங்கித் அகர்வால் என்ற நபர் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றுள்ளார்.
அதிக விலைக்கு டிக்கெட்டை விற்றவர் கைது:
இதனிடையே, அங்கித் அகர்வால் என்ற நபர் 2,500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை 11 ஆயிரம் ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கித் அகர்வாலிடன் இருந்த 20 டிக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதோடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மோசடியில் ஈடுபட்ட ஜெய்ஷா:
முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அக்டோபர் 14 - ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போதும் இது போன்ற மோசடியில் ஒருவர் ஈடுபட்டார். மோசடியில் ஈடுபட்டவர் பெயர் ஜெய்ஷா என்பதும், அவர் 2.68 லட்சம் மோசடி செய்ததையும் விசாரணையில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெய்ஷா என்ற நபர், தான் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (Gujarat Cricket Association) அதிகாரி என்று கூறி ரசிகர்களிடன் மோசடி செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: PAK vs BAN Innings Highlights: கேப்பில் விழுந்த விக்கெட்டுகள், தடுமாறிய வங்கதேசம்- பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் இலக்கு
மேலும் படிக்க: Fastest 100 Wickets: அதிவேக 100 விக்கெட்... பட்டியலில் இணைந்தார் ஷாஹீன் அப்ரிடி... முதல் இடத்தில் யார்? விவரம் இதோ!