Fastest 100 Wickets: அதிவேக 100 விக்கெட்... பட்டியலில் இணைந்தார் ஷாஹீன் அப்ரிடி... முதல் இடத்தில் யார்? விவரம் இதோ!
ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷாஹீன் ஷா அப்ரிடி.
உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று (அக்டோபர் 31) நடைபெறும் 31-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இன்று 2 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஷாஹீன் ஷா அப்ரிடி பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் மருமகனான ஷாஹீன் அப்ரிடி டி 20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 46 இன்னிங்ஸ்கள் விளையாடி 105 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
முன்னதாக இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்:
சந்தீப் லமிச்சானே
23 வயதே ஆன சந்தீப் லமிச்சானே நேபாள அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 51 போட்டிகளில் விளையாடி உள்ளார். முன்னதாக இவர் விளையாடிய 42 வது போட்டியில் 100-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.
அதோடு தான் இதுவரை விளையாடிய 51 ஒரு நாள் போட்டிகளில் 2024 ரன்கள் கொடுத்து 112 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
ரசீத் கான்:
இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளார் ரசீத் கான்.
தான் விளையாடிய 44 வது போட்டியில் 100-வது விக்கெட்டை கைப்பற்றிய இவர், இதுவரை மொத்தம் 100 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3636 ரன்களை விட்டுக்கொடுத்து மொத்தம் 179 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருக்கிறார்.
ஷாஹீன் ஷா அப்ரிடி:
குறைந்த போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி.
அதன்படி இதுவரை அவர் விளையாடி உள்ள 51 ஒரு நாள் போட்டிகளில் 101விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், 2315 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்செல் ஸ்டார்க்
நான்காவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தான் விளையாடிய 52-வது போட்டியில் 100-வது விக்கெட்டை எடுத்து அசத்தியவர். இதுவரை அவர் விளையாடி உள்ள 117 ஒரு நாள் போட்டிகளில், 5196 ரன்கள் கொடுத்து மொத்தம் 227 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சக்லைன் முஷ்டாக்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, இவர் விளையாடிய 53 வது போட்டியில் 100- விக்கெட்டுகளை கடந்தார். இதுவரை அவர் விளையாடிய 169 ஒரு நாள் போட்டிகளில் 6275 ரன்களை கொடுத்து 288 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேலும், இந்த பட்டியில் முதல் ஐந்து இடத்தில் ஒரு இந்திய பந்து வீச்சாளர்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க: Famous Cricketers Birthday November : நவம்பர் மாதம் பிறந்த கிரிக்கெட் நாயகர்கள்..!
மேலும் படிக்க: Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!