மேலும் அறிய

Sachin Tendulkar: ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்... புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்! விவரம் இதோ!

கிரிக்கெட்டில் டேவிட் வார்னரின் வளர்ச்சி அபாரமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா:


பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் தான் நடைபெற்றது. முன்னதாக, இந்த டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார்.


இந்நிலையில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 34 ரன்கள் எடுத்தார், அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார்.

அதிரடி ஆட்டக்காரர் வார்னர்:


கடந்த 2009 ஆம் ஆண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் டெஸ்ட் போட்டியில் கடந்த 2011  ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8786 ரன்கள் குவித்துள்ளார். 44.6 என்ற சராசரியில் 26 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவரை ஆஸ்திரேலிய அணியினரும், பாகிஸ்தான் அணியினரும் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். டேவிட் வார்னரும் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் விடைபெற்றார்.

 

இந்நிலையில், ஆரம்ப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய வார்னர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு முன்னேறியது அபாரமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

அபாரமான வளர்ச்சி:

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “அடித்து நொறுக்கக் கூடிய டி20 பேட்ஸ்மேனாக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக மாறியது டேவிட் வார்னர் பயணத்தின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது. கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி அபாரமானது.

குறிப்பாக இன்னிங்ஸை வேகப்படுத்தும் கலையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை அவர் காட்டியுள்ளார். அற்புதமான டெஸ்ட் கேரியருக்காக வாழ்த்துக்கள் டேவிட். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும்  வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!

 

மேலும் படிக்க: 2024 T20 World Cup: டி 20 உலகக் கோப்பை...”விராட் கோலியும் ரோகித் சர்மாவும்...” - இர்பான் பதான் சொன்ன அந்த வார்த்தை!

 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
Hyundai Verna: ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
Embed widget