WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
![WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை! India tops the Test Championship points table with a historic win, know the condition of all the teams WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/47c4043de708630484d0836500a892e01704381765344572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தரவரிசை பட்டியல்:
தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | ட்ரா | புள்ளிகள் | score% |
---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 4 | 2 | 1 | 1 | 26 | 54.16 |
2 | தென்னாப்பிரிக்கா | 2 | 1 | 1 | 0 | 12 | 50.00 |
3 | நியூசிலாந்து | 2 | 1 | 1 | 0 | 12 | 50.00 |
4 | ஆஸ்திரேலியா | 7 | 4 | 2 | 1 | 42 | 50.00 |
5 | பங்களாதேஷ் | 2 | 1 | 1 | 0 | 12 | 50.00 |
6 | பாகிஸ்தான் | 4 | 2 | 2 | 0 | 22 | 45.83 |
7 | மேற்கிந்திய தீவுகள் | 2 | 0 | 1 | 1 | 4 | 16.67 |
8 | இங்கிலாந்து | 5 | 2 | 2 | 1 | 9 | 15.00 |
9 | இலங்கை | 2 | 0 | 2 | 0 | 0 | 0.00 |
இந்தியா:
இந்தியா இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா 26 புள்ளிகளுடன் 54 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து இந்தியா அணி இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
தென்னாப்பிரிக்கா:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ன்படி தென்னாப்பிரிக்கா இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் தற்போதைய இந்தியாவுக்கு எதிரான தொடர்தான். ஒரு போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா மற்றொரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. 12 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 50 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி:
நியூசிலாந்து அணியும் தற்போதைய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. வங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றது. 50 சதவீததுடன் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க: IND vs SA 2nd Test: பழிக்குப் பழி! புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
மேலும் படிக்க: ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்! விவரம் உள்ளே!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)