Most Double Centuries: சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் விளாசியுள்ள தற்போதைய வீரர்களின் பட்டியல் இதோ...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் அசத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் அசத்தியுள்ளார். இதன் மூலம் தற்போது விளையாடி வரும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வில்லிம்சனின் அபார சதத்தால் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து, வெலிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அபாரமாக விளையாடிய வில்லியம்சன் 215 ரன்களையும், நிக்கோலஸ் 200 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 580 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை சேர்த்துள்ளது.
வில்லியம்சன் சாதனை:
இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் சர்வதேச வீரர்களில் அதிக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் ஜோ ரூட்டின் சாதனையை வில்லியம்சன் தகர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்துள்ள ஆறாவது இரட்டை சதம் இதுவாகும். இந்த பட்டியலில் 7 இரட்டை சதங்களுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்டில் அதிக இரட்டை சதம் விளாசிய தற்போதைய வீரர்கள்:
கோலி - 7 இரட்டை சதங்கள்
வில்லியம்சன் - 6 இரட்டை சதங்கள்
ஜோ ரூட் - 5 இரட்டை சதங்கள்
ஸ்டீவ் ஸ்மித் - 4 இரட்டை சதங்கள்
முஸ்தபிகுர் ரஹீம் - 3 இரட்டை சதங்கள்
புஜாரா - 3 இரட்டை சதங்கள்
வார்னர் - 3 இரட்டை சதங்கள்
கோலியை சமன் செய்த வில்லியம்சன்:
இந்த இரட்டை சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசிய சதங்களின் எண்ணிக்கை 28-ஐ எட்டியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார். அதோடு, 8000 டெஸ்ட் ரன்களைக் கடந்த முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் டெஸ்டில் அதிவேகமாக 8,000 ரன்களை கடந்த ஆசியர் அல்லாத மூன்றாவது வீரர் எனும் சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஏற்கனவே பிரையன் லாரா மற்றும் மேத்யூ ஹேடன் ஆகியோர் உள்ளனர். மேலும், சர்வதேச போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை கடந்ததோடு, வேகமாக இந்த இடத்தை அடைந்த 5வது வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.
வேகமாக 17 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள்:
கோலி - 363 இன்னிங்ஸ்
ஹசிம் ஆம்லா - 381 இன்னிங்ஸ்
பிரையன் லாரா - 389 இன்னிங்ஸ்
சச்சின் - 394 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங், வில்லியம்சன் - 402 இன்னிங்ஸ்