ஃபேவரைட் ஷாட்! பேக் டூ ஃபார்ம்.. சிம்பாலிக்காக ஊருக்குச் சொன்ன விராட் கோலி!
இங்கிலாந்தின் லியாசெஸ்டர் அணிக்கு நன்றி சொல்லி விராட் கோலி ஃபேஸ்புக் போஸ்ட். விராட் தனது கவர் ட்ரைவ் ஷாட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தின் லியாசெஸ்டர் அணிக்கு நன்றி சொல்லி விராட் கோலி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் போஸ்ட். விராட் தனது கவர் ட்ரைவ் ஷாட் போட்டோவை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் குஷியாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. டெஸ்ட் போட்டிற்கு முன்னர் இந்திய அணி லியாசெஸ்டர் அணியுடன் பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடியது. இதில் இந்திய அணி சார்பாக விளையாடிய விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 33 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 67 ரன்களும் எடுத்து அணியினை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
View this post on Instagram
இந்த பயிற்சி ஆட்டத்தால் மீண்டும் பழைய பார்ம்க்கு வந்துள்ளார். குறிப்பாக தந்து கவர் டிரைவ் ஷாட்டுகள் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த குஷி ரசிகர்களைக் கடந்து விராட்க்குள்ளும் படர்ந்திருக்கிறது. இதனால் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில், தனது கிளாஸ் ஷாட்டான கவர் ட்ரைவ் ஷாட் ஆடும் புகைபடத்தினை பகிர்ந்து லியாசெஸ்டர் அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விராட் கோலியை நீண்ட நாளுக்குப் பிறகு பார்மில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விராட்டின் இந்த போஸ்ட்டுக்கு அனைவரும் வாழ்த்து மற்றும் ஜாலி கமெண்ட்டுகள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்