மேலும் அறிய

"6 மாதத்திற்கு ஒரே மாதிரியான உணவைக் கூட சாப்பிடுவேன்; சுவை முக்கியமில்லை" - டயட் குறித்து பேசிய கோலி!

கோலி தனது உணவின் ருசி குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. காரமான, வறுத்த உணவுகளை கோலி தவிர்க்கிறார். அவர் மசாலா கறிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் ராஜ்மா மற்றும் தட்டபயறு சாப்பிடுவதாக கூறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டிங்கில் காட்டும் அதே நேர்த்தியை தனது உடல் ஃபிட்னஸிலும் காண்பிப்பார். கடுமையான வொர்க்அவுட்டுடன், கடுமையான டயட்டையும் பின்பற்றுவதே அதற்கு காரணம். கோலி சமீபத்தில் தனது உணவில் 90 சதவீதம் வேகவைத்த உணவுகள்தான் என்றும், மசாலா பெரும்பாலும் சேர்ப்பது இல்லை என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபிட்னஸ் ரகசியம் கூறிய கோலி

கோலியின் தீவிரமான ஒர்க்அவுட் மூலம் அவரது உடலை மேம்படுத்தி வைத்திருக்கும் அவர் அடிக்கடி பாராட்டப்பட்டாலும், அவரது உணவுமுறையும் அவரது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அவர் கூறுவதில் இருந்து தெளிவாகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான சமீபத்திய உரையாடலில், முன்னாள் இந்திய கேப்டன் கோலி, தனது கடுமையான டயட் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தினார். கோலி தனது உணவின் ருசி குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை, ஆனால் அவர் எப்போதாவது சாலட்களை ரசித்து உண்பதாகக் கூறினார். ஆறு மாதங்களுக்கு ஒரே மாதிரியான உணவைகூட உண்ணலாம், பெரிய பிரச்சனை இல்லை என்று கோலி கூறினார்.

விராட் கோலியின் டயட்

விராட் கோலி தனது டயட்டில் வேகவைத்த உணவுகளோடு, சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது பிற மசாலாப் பொருட்களுடன் பான்-க்ரில் செய்யப்பட்ட உணவுகளும் சேர்த்துக்கொள்கிறார். காரமான, வறுத்த உணவுகளை கோலி தவிர்க்கிறார். அவர் மசாலா கறிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் ராஜ்மா மற்றும் தட்டபயறு சாப்பிடுவதாக கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்: Fact Check: பாலியல் வன்கொடுமையை தடுக்க கல்லறைக்கு பூட்டா? வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி என்ன?

தொடர்ந்து அயராமல் உழைக்கும் கோலி

விராட் கோலி தனது ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி)க்காக இந்த ஆண்டு தொடர்ந்து பெரிய ஸ்கோரைக் குவித்து வருவதால் அவர் ஒரு கட்டத்தில் ஓய்வெடுப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அயராது உழைத்து வரும் அவரது உடல்நிலையைக் கண்டு அவரது அர்ப்பணிப்பால் அவரது ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து வருகின்றனர். அவர் தனது உடற்தகுதி அளவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், அவரது விளையாட்டில் முன்னணியில் இருக்கவும் தனது வழக்கத்தில் எவ்வாறு மாற்றங்களைச் செய்துள்ளார் என்பதைப் பார்ப்பது பலருக்கும் ஊக்கமளிக்கிறது.

வியந்து போன ரசிகர்கள்

டயட் குறித்து அவர் கூறும் நேர்காணல் வைரலான நிலையில், சமூக வலைதள பயனர் ஒருவர் கோலியின் உடற்தகுதி குறித்த அர்ப்பணிப்பைக் கண்டு ஆச்சர்யமடைந்து கமெண்ட் தெரிவித்துள்ளார். "தீண்டத்தகாத உயரங்களை அடைந்த பிறகும், விளையாட்டு மற்றும் அதில் தன்னை பொறுத்திக் கொள்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பார்ப்பது மனதைக் கவர்கிறது" என்று எழுதி இருந்தார்.

மற்றொரு பயனர் கோலியை "உடற்தகுதி, நெறிமுறைகள், பசி மற்றும் சுய ஒழுக்கத்தின் சுருக்கம்" என்று அழைத்தார். கோலியின் உணவின் முக்கிய அம்சம் அவரது உணவின் சுவையை பெரிதாக நினைப்பதில்லை என்பதுதான் என்று மக்கள் பலர் சுட்டிக்காட்டினர். ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பேணுவதில் விராட் கோலி வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உறுதிப்பாடு எவ்வாறு வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு என்று அவரை புகழ்ந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget