ICC World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை.. ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய இந்தியா!
ICC world Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயானஇரண்டாவதுடெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில்,40 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை:
NO |
அணிகள் |
விளையாடியது |
வெற்றி |
தோல்வி |
DRAW |
POINT DEDUCTIONS |
புள்ளிகள் |
PCT |
---|---|---|---|---|---|---|---|---|
1 |
இந்தியா |
9 | 6 | 2 | 1 | 2 | 74 | 68.52 |
2 |
ஆஸ்திரேலியா |
12 | 8 | 3 | 1 | 10 | 90 | 62.50 |
3 |
நியூசிலாந்து |
6 | 3 | 3 | 0 | 0 | 36 | 50.00 |
4 |
இலங்கை |
4 | 2 | 2 | 0 | 0 | 24 | 50.00 |
5 |
தென்னாப்பிரிக்கா |
6 | 2 | 3 | 1 | 0 | 28 | 38.89 |
6 |
பாகிஸ்தான் |
5 | 2 | 3 | 0 | 2 | 22 | 36.66 |
7 |
இங்கிலாந்து |
13 | 6 | 6 | 1 | 19 | 57 | 36.54 |
8 |
வங்காளதேசம் |
4 | 1 | 3 | 0 | 0 | 12 | 25.00 |
9 |
வெஸ்ட் இண்டீஸ் |
9 | 1 | 6 | 2 | 0 | 20 | 18.52 |
இச்சூழலில் வங்கேதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தி அட்டவணையில் மாற்றம் ஏற்படும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் ஆகஸ்ட் 30-ம் தேதியும் தொடங்குகிறது.
India at the top of the WTC table. 🇮🇳 pic.twitter.com/waEvuprSrJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 18, 2024
பாகிஸ்தான் தற்போது 36.66% புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vinesh Phogat: வினேஷ் போகத்திற்கு தங்க பதக்கம்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கிராமத்தினர்!
மேலும் படிக்க: Jasprit Bumrah: பரபரப்பு.. கேப்டன் பதவி கேட்கும் ஜஸ்ப்ரித் பும்ரா! இந்திய அணியில் ட்விஸ்ட்