Watch Video: காதலில் விழுந்தாரா ஹர்திக் பாண்டியா? வைரல் வீடியோ
பிரிட்டனைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியாவிடம் ஹர்திக் பாண்டியா காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிரீஸில் ஹர்திக் பாண்டியா:
ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை விவாகரத்து செய்வதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தற்போது விடுமுறையை கிரீஸ் நாட்டில் கழித்து வருகிறார். இதில் பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியாவின் பெற்றோர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். இவர் பிரிட்டிஸ் தொலைக்காட்சி தொடரான தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.
View this post on Instagram
காதலில் விழுந்தாரா?
நடாஷா ஸ்டான்கோவிக் உடனான உறவை முடித்து கொண்ட ஹர்திக் பாண்டியா, அடுத்ததாக ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்ந்து வருவதோடு, புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அதேபோல் ஜாஸ்மின் வாலியா இந்திய கிரிக்கெட்டர்களில் ஹர்திக் பாண்டியாவை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார். இதானல் கண்டிப்பாக இருவரும் காதல் உறவில் தான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இருவர் தரப்பிலும் இது தொடர்பாக எந்த கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.