புத்தாண்டு தீர்மானங்களும் புது உற்சாகமும்!

Published by: ஜான்சி ராணி

வீடு, மனை, வாகனம் வாங்குவது போன்ற குடும்ப இலக்குகள் குறித்து திட்டமிடலாம். அதற்கான அடிப் படை முயற்சிகள், திட்டங்களை புதிய ஆண்டில் தொடங்கலாம்.

கார் டிரைவிங், கணினி பயன்பாடு போன்ற புதிய திறன்களை கற்றுக்கொள்ளலாம். புதிய சமையல் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

குடும்பத்துடன் புது இடங்களுக்கு சென்று வரலாம். அவை தொலைதூர சுற்றுலாத் தலங்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அருகில் உள்ள, அதிகம் அறியப்படாத இடங்களுக்குப் போகலாம்.

சில நல்லவிதமான, வார, மாத வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.அலமாரி சுத்தப்படுத்துவது, தோட்ட, வாகன பராமரிப்பு...இப்படி.

தீய பழக்கங்களை துறப்பதை தீவிரமாக பின்பற்றலாம். அவற்றை படிப்படியாக நடை முறைக்கு கொண்டு வருகிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒரேயடியாக விட்டொழிப்பது தான் சரி.

நமது நேரத்தை விரயமாக்கும், எதிர்மறை எண்ணங்களை வளர்க் கும் நட்புகள்,உறவுகளிடம் இருந்தும் கொஞ்சம் விலகி இருப்பதும் நன்று..

ஆர்வமுள்ள, சாதிக்கத் துடிக் கும் ஆக்கப்பூர்வ நபர்களுடன் பழகுவதும், அவர் களை பின்பற்ற முயலுவதும் நமக்கு நன்மை பயக்கும்.

மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..