Ind vs Aus BGT 2024 : இரண்டு சர்ச்சை முடிவுகள்! டிஆர்எஸ் இருந்தும் பயனில்லை... விமர்சனம் செய்யும் ரசிகர்கள்
Ind vs Aus : ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 340 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய இந்திய அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது படுமோசமாக தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டின் முடிவு சர்ச்சையாகியுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட்:
மெல்போர்னில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது, ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 475 ரன்கள் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தனதுமுதல் இன்னிங்ஸ்சில் 106 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய 340 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது, இலக்கை துரத்திய இந்திய அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது படுமோசமாக தோல்வியடைந்தது.
இதையும் படிங்க: IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
சர்ச்சையான முடிவுகள்:
இந்த போட்டியின் முக்கியமான கட்டத்தில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களுக்கு அவுட்டானர். பேட் கம்மின்ஸ்சின் பந்து வீச்சில் அலெக்ஸ் கேரியிடம் கொடுத்தார். கள நடுவர் அவுட் கொடுக்க மறுத்த நிலையில் டிஆர் எஸ் முறைப்படி மூன்றாம் நடுவரிடம் முறையிடப்பட்டது, ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் உரசியதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை, ஆனால் பந்து பேட் மற்றும் க்ளவுசை கடந்த நிலையில் பந்து திசையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்ப்பட்டது. இதை வைத்து மூன்றாம் நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்தார்.
"I can see the ball has made contact with the gloves. Joel, you need to change your decision."
— 7Cricket (@7Cricket) December 30, 2024
And with that, Jaiswal is out! #AUSvIND pic.twitter.com/biOQP4ZeDB
ஆனால் ஜெய்ஸ்வால் கள நடுவர்களிடம் வாக்குவதம் செய்துவிட்டு அதிருப்தியுடம் பெவிலியனுக்கு திரும்பினார்.
அடுத்தாக விளையாடிய ஆகாஷ் தீப்-க்கும் இதே போன்று சர்ச்சையான முறையில் அவுட் வழங்கப்பட்டது, கள நடுவர் அவுட் வழங்காத நிலையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நடுவரிடம் முறையிட்ட நிலையில் பந்து பேட்டை கடந்து நிலையில் ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு தெரிந்தது, ஆனால் மற்றோரு கோணத்தில் பார்க்கும் போது பந்துக்கும் பேட்டுக்கும் பெரிய இடைவேளி இருந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் இதற்கும் அவுட் வழங்கினார்.
This time Snicko shows something!
— 7Cricket (@7Cricket) December 30, 2024
India eight down!#AUSvIND pic.twitter.com/hIJm2fX2tf
கிளிக்கும் நெட்டிசன்ஸ்:
இந்த இரண்டு சர்ச்சையான முடிவால் இந்திய அணி இந்த போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, ஜெய்ஸ்வால் அவுட் ஆகும் போது ஸ்னிக்கோ மீட்டரை வைத்து முடிவை வழங்கவில்லை,
Full on #cheating in #INDvsAUS Test Match
— Kamit Solanki (@KamitSolanki) December 30, 2024
No edge on Snicko and third umpire given #YashasviJaiswal out
Third umpire Sharfuddoula Saikat belongs to Bangladesh.
Stupid Stupid Stupid#Cheaters #AUSvINDIA #RohitSharma𓃵 #ViratKohli𓃵 #INDvAUS #TestCricket #IndiaOut pic.twitter.com/f3y4DpH8fj
அதே போல ஆகாஷ் தீப் அவுட்டாகும் போது சரியான முடிவை மூன்றாவது நடுவர் வழங்கவில்லை என்று இந்திய ரசிகர்கள் குற்றச்சாட்டை எடுத்து வைக்கின்றனர்.