SA vs WI: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் அசத்தல் நடை.. சீறி பாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி!
கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது, 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியைக் கொடுத்தார் மார்கோ யான்சன்.
![SA vs WI: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் அசத்தல் நடை.. சீறி பாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி! t20 world cup 2024: South Africa qualify for the Semi Finals of T20 World Cup West indies got eliminated SA vs WI: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் அசத்தல் நடை.. சீறி பாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/4eff118d40abbb6fa7af1d60f31778fd1719216894957571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
அரையிறுதிக்கு தகுதி:
மழை குறுக்கிட்டதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது, 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியைக் கொடுத்தார் மார்கோ யான்சன்.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை பெய்ததால், தென்னாப்பிரிக்காவுக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை அந்த அணி 16.1 ஓவரில் எட்டியது. ஆட்டம் இறுதி வரை நீடித்தது. இதில், தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
தென்னாப்பிரிக்கா பேட்டிங் இன்னிங்ஸ்:
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ரீசா ஹென்ட்ரிக்ஸின் முதல் விக்கெட்டை இழந்தது. அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ட்ரிக்ஸ் கோல்டன் டக்கில் அவுட் ஆனார். பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் குயின்டன் டி காக்கும் 7 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் சிறிது நேரம் ஆடிய கேப்டன் எய்டன் மார்க்ரம் 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட்டானார்.
இதன்பின், 8வது ஓவரின் கடைசி பந்தில் ஹென்ரிச் கிளாசனின் நான்காவது விக்கெட்டை இழக்க, இந்த விக்கெட்டுக்குப் பிறகு போட்டி வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக மாறத் தொடங்கியது போட்டி. இதன் பின்னர் 14 பந்துகளை விளையாடிய நிலையில் மில்லர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து 12ஆவது ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட்டை இழக்க, ஐந்தாவது விக்கெட்டை இழந்து தடுமாற தொடங்கியது தென்னாப்பிரிக்கா அணி.
பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக உள்ளே வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பாகவும், நிதானமாகவும் விளையாடி 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். இவரும் 14-வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
South Africa has my heart 💚 Marco Jansen you beauty 😻 #SAvsWI #WIvsSA #ICCT20WorldCup2024 pic.twitter.com/Yu4OtpAL7y
— Deekshitha (@Deeksh_Aithal) June 24, 2024
இதன்பின், 16வது ஓவரின் இரண்டாவது பந்தில் கேசவ் மகாராஜ் மூலம் தென்னாப்பிரிக்கா அணி ஏழாவது விக்கெட்டை இழக்கவே, எட்டாவது விக்கெட்டுக்கு, ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் சிறிய ஆனால் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். யான்சன் 14 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 21* ரன்களும், ரபாடா 3 பந்துகளில் 1 பவுண்டரி உதவியுடன் 5* ரன்களும் எடுத்தனர்.
கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள்:
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவரை தொடர்ந்து, ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)