T20 World Cup 2022: சக வீரர்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்த பட்லர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!
கிரிக்கெட் விளையாட்டானது மத நம்பிக்கை அப்பாற்பட்டது என்றாலும், சக வீரர்களின் மத நம்பிக்கைக்கு உணர்வு அளித்த பட்லர் மற்றும் சக வீரர்களை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நேற்று முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல நேற்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வெற்றி பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த அணி வெல்லும் இது 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் தனது அணி வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்வின்போது இங்கிலாந்து அணி வீரர்களான அடில் ரஷித் மற்றும் மொயின் அலி உடனிருந்தனர். அப்போது மற்ற வீரர்கள் ஷாம்பியன் குலுக்க தயாராக இருந்தனர். இதை பார்த்த பட்லர் தங்கள் அணி வீரர்களிடம் அடில் ரஷித் மற்றும் மொயின் அலி செல்லும்வரை காத்திருக்க சொன்னார்.
இதையடுத்து, அவர்கள் மேடை தளத்திலிருந்து வெளியேறும் வரை காத்திருந்து அதன்பிறகு ஷாம்பியனை குலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இஸ்லாம் தடைசெய்யப்பட்ட சில விஷயங்களில் மதுவும் ஒன்று. கிரிக்கெட் விளையாட்டானது மத நம்பிக்கை அப்பாற்பட்டது என்றாலும், சக வீரர்களின் மத நம்பிக்கைக்கு உணர்வு அளித்த பட்லர் மற்றும் சக வீரர்களை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Respect for religious diversity is an essential element of any peaceful society.
— Mohd Shahnawaz Hussain (@Mohd_S_Hussain) November 13, 2022
Here England captain Jos Buttler asked Adil Rashid and Moeen Ali to leave before they celebrated with champagne. Respect.#ENGvsPAK #T20WorldCup22 #T20WorldCupFinal pic.twitter.com/Tu9pvqKZba
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கோப்பையை பெற்றபோது ஷாம்பியன் பாட்டிலை குலுக்க தயாராக இருந்தனர். கவாஜா ஒரு முஸ்லீம் என்பதால் அதில் இருந்து விலகி ஓரமாக நின்றார்.
This might be a small gesture but this is what makes Pat Cummins great. He realised Khawaja had to dip because of the booze and rectifies it. pic.twitter.com/GNVsPGJhfK
— Fux League (@buttsey888) January 16, 2022
இதைபார்த்த பேட் கம்மின்ஸ் தனது அணி வீரர்களிடம் ஷாம்பியன் பாட்டிலை குலுக்க வேண்டாம் என்று தெரிவித்து கவாஜாவை அணியினரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார்.