T20 World Cup 2022: டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் அட்டவணை அறிவிப்பு! இந்தியா யாருடன் மோதல்!
டி20 உலககோப்பைக்கான பயிற்சி போட்டிகள் அட்டவணையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்காக, கிரிக்கெட் அணிகள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றன. பல்வேறு நாட்டு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் விளையாடும் பயிற்சிப் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இந்த பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்திய அணி தனது பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் வரும் அக்டோபர் 17-ந் தேதி கப்பா மைதானத்தில் ஆஸ்திரலியாவையும், அக்டோபர் 19-ந் தேதி நியூசிலாந்து அணியையும் கப்பா மைதானத்தில் சந்திக்க உள்ளது.
பயிற்சி போட்டிக்கான அட்டவணை விவரம் :
அக்டோபர் 10 : வெஸ்ட் இண்டீஸ் – ஐக்கிய அரபு அமீரகம்
அக்டோபர் 10 : ஸ்காட்லாந்து – நெதர்லாந்து
அக்டோபர் 10 : இலங்கை – ஜிம்பாப்வே
அக்டோபர் 11 : நமீபியா – அயர்லாந்து
அக்டோபர் 12 : வெஸ்ட் இண்டீஸ் – நெதர்லாந்து
அக்டோபர் 13 : ஜிம்பாப்வே – நமீபியா
அக்டோபர் 13 : ஸ்காட்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம்
அக்டோபர் 13 : இலங்கை – அயர்லாந்து
அக்டோபர் 17 : ஆஸ்திரேலியா – இந்தியா
அக்டோபர் 17 : நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 17 : இங்கிலாந்து – பாகிஸ்தான்
அக்டோபர் 17 : ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம்
அக்டோபர் 19 : ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்
அக்டோபர் 19 : வங்காளதேசம் – தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 19 : நியூசிலாந்து – இந்தியா
உலகக் கோப்பை போட்டிக்கான பயிற்சி போட்டிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உலகக் கோப்பை டி20 தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க : IND vs AFG: வெற்றியுடன் வெளியேறுமா இந்தியா? : சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானுடன் மோதல்..
மேலும் படிக்க : Asia Cup 2022: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய பாக்... மைதானத்தில் ரசிகர்களிடையே வெடித்த மோதல்.. வைரல் வீடியோ