Suryakumar Yadav: கூட்டிப் பெருக்குனது போதும் சூர்யா..! இந்திய கேப்டனின் வீக்னஸ் பிரச்சனை!
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட் அடிப்பதில் பலவீனமானவர் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட் அடிப்பதில் பலவீனமானவர் என்று சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி துபாய் பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தனை எதிர்கொள்ள உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
முன்னதாக, இன்று (செப்டம்பார் 26) ஆம் தேதி நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில், சுப்மன் கில் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியனார்.
ஸ்வீப் ஷாட்டில் சொதப்பும் சூர்யகுமார் யாதவ்:
இந்த நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மட்டும் எடுத்து 12 ரன்களில் எல்.பி.டபூள்யூ ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். அதாவது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட்டில் எவ்வளவு பலவீனமானவர் என்பதை இன்று மீண்டும் பார்க்க முடிந்தது.
Suryakumar Yadav dismissed for 12 from 13 balls. pic.twitter.com/40di5EHdMQ
— Johns. (@CricCrazyJohns) September 26, 2025
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயலும் போது இது போன்று விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் பலமுறை இப்படி ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில் அத அப்படியே தொடர்வது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீப் ஷாட் ஆடுவதில் சூர்யகுமார் யாதவ் வீக்னெஸ் ஆக இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் சூர்யகுமார் யாதவ் எப்படி விளையாடி போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




















