Shreyas Iyer: ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கிய இடத்தில் காயம்! பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை
ஸ்கேன் மூலம் மண்ணீரலில் ஒரு பெரிய காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார், மருத்துவ ரீதியாக நிலையாக உள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய ஒருநாள் அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்ப்பட்டது.
பிசிசிஐ அறிக்கை:
இந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்து பிசிசிஐ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடது கீழ் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. மேலும் மதிப்பீட்டிற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Medical update on Shreyas Iyer. Details 🔽 #TeamIndia | #AUSvIND https://t.co/8LTbv7G1xy
— BCCI (@BCCI) October 27, 2025
ஸ்கேன் மூலம் மண்ணீரலில் சிராய்ப்பு காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார், மருத்துவ ரீதியாக நிலையாக உள்ளார், மேலும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ மருத்துவக் குழு, அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் இந்திய அணி மருத்துவர் ஷ்ரேயாஸின் உடல் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக சிட்னியில் அவருடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் ஏற்பட்டது எப்படி?
போடிட்யின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க, பின்னோக்கி ஓடியபடி சென்று லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார். ஆனால், அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தரையில் பலமாக மோத, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே அவர் கடுமையாக சிரமப்பட்டார். தொடர்ந்து சக வீரர்களின் உதவியுடன் அங்கிருந்தெ வெளியேறிய ஸ்ரேயாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.





















