மேலும் அறிய

Sanju Samson: 8 ஆண்டுகளில் இதுவரை 37 போட்டிகள் மட்டுமே.. இந்திய நிர்வாகம் ஏன் சஞ்சு சாம்சனை நம்பவில்லை?

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரிலாவது சாம்சன் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்து அப்போதும் ஏமாற்றமே மிச்சம். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்று முன்னிலை பெற முயற்சிப்பார்கள். போட்டியானது கேரளாவில் நடைபெறவுள்ளதால் சில இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஹோட்டல் மற்றும் ஸ்டேடியத்திற்கு வெளியே சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து சுற்றித் திரிகின்றனர்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் சொந்த ஊர் திருவனந்தபுரம். சிறு வயதில் டெல்லியில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய சாம்சன், அதன்பிறகு திருவனந்தபுரம் வந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அண்டர் 19 மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியதால் இவரது அடுத்தக்கட்ட பாதை ஐபிஎல் நோக்கி நகர்ந்தார். அங்கும் சாம்சன் சிறப்பாக செயல்பட்டு பின்னர் இந்திய அணிக்காகவும் அறிமுகமானார். உலகக் கோப்பை 2023ல் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடம் பிடிக்கவில்லை. தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரிலாவது சாம்சன் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்து அப்போதும் ஏமாற்றமே மிச்சம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நவம்பர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன், இந்த முறை சஞ்சு சாம்சன் எப்படியாவது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற ஊகங்கள் இருந்தன. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வளிக்க பட்டதால் சஞ்சு சாம்சன் இடம் உறுதி என நம்பப்பட்டது. ஆனால், இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் சஞ்சு சாம்சன் வெறுங்கையுடன் வெளியேறினார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2015 இல் அறிமுகமாகி இதுவரை 37 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே.. 

சஞ்சு சாம்சன், ஐபிஎல்-லில்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அவருக்கு இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தது. 2015-ம் ஆண்டுதான் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், இந்த 8 ஆண்டுகளில், சாம்சன் வெறும் 13 ஒருநாள் மற்றும் 24 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இது உண்மையிலேயே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. கிரிக்கெட் ரசிகர்களும் சஞ்சு மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது இந்திய நிர்வாகம் ஏன் சஞ்சு சாம்சனை நம்பவில்லை என்ற கேள்வி எழுகிறது.

பிசிசிஐ ஏன் சஞ்சுவை நம்பவில்லை?

ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடிய பிறகு, இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பல வாய்ப்புகள்  வழங்கப்பட்டது. முதலில், 2015ல், டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தாலும், அவர் இந்திய டி20 அணிக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாகவும் இருந்தார். சஞ்சு சாம்சனுக்கு பொறுமை என்பது கிடையவே கிடையாது. அதிரடியாக ரன்களை குவிக்க முயற்சித்து அவுட்டாகிவிடுவார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 20க்கும் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த காலக்கட்டத்தில் ரிஷப் பண்ட், இஷான் கிஷான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு டி20யில் சஞ்சுவை விட சற்று சிறப்பாக இருந்தது. இதையடுத்து, சஞ்சுவுக்குப் பதிலாக பண்ட் மற்றும் இஷான் கிஷன் அணியில் தொடர்ந்து இடம்பிடித்ததற்கு இதுவே காரணம். 

ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் எப்படி..? 

டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சொதப்பியதால் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, ​​ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. சஞ்சு சாம்சன் டி20யை விட ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார். 13 ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 55.71. இங்கே அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 104. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று அரைசதங்களையும் அடித்துள்ளார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் அவரது இடம் கேள்விகுறியாகவே உள்ளது. இஷான் கிஷன் முதல் ரிஷப் பந்த் வரை அனைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் ஒருநாள் பேட்டிங் சராசரியின் அடிப்படையில் சஞ்சுவை விட மிகவும் பின்தங்கியிருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படாதது கேள்விக்குறியாக உள்ளது. 

சஞ்சு எப்போது முழுமையான இடத்தைப் பிடிப்பார்..? 

அடுத்த முறை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போது சஞ்சு ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இது சாத்தியமாகும். இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும். சஞ்சு சாம்சன் சதம் அடித்தால்தான் இந்திய அணி ஒரு மறுக்கப்படாத வீரராக வலம் வர முடியும். தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழப்பதை முதலில் சாம்சன் நிறுத்த வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget