Sanju Samson ODI Record: தென் ஆப்பிரிக்காவை அலறவிட்ட சஞ்சு சாம்சனின் ஹை ஸ்கோர் இதுதான்!
Sanju Samson ODI Record: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தனது ஹை ஸ்கோரை எடுத்துள்ளார்.
Sanju Samson ODI Record: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தனது ஹை ஸ்கோரை எடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்கிய போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வந்தனர். 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அப்போது களம் இறங்கிய சஞ்சு சாம்சன், தனது நிதானமான மற்றும் உறுதியான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் அணியை வெற்றி பெறச் செய்துவிடுவார் என்றே அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால், ஐசிசி பிறப்பித்துள்ள புதிய விதியின் படி நான்-ஸ்டைரைக்கர் பக்கத்தில் நின்ற சஞ்சு சாம்சன் பேட் செய்ய முடியாமல் போனது. ஆனால் தோல்வியின் விடாப்பிடியில் இருந்த இந்திய அணியை கடைசி நேரத்தில் அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் தோல்வி விகிதத்தினை 9 ரன்களாக குறைத்தார். மேலும் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. மிகவும் வலுவான பவுளர்களைக் கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியினை சஞ்சு தனது திறமையான ஆட்டத்தால் கதி கலங்க வைத்தார்.
Things went right down to the wire but it's South Africa who win the first #INDvSA ODI.#TeamIndia will look to bounce back in the second ODI. 👍
— BCCI (@BCCI) October 6, 2022
Scorecard ▶️ https://t.co/d65WZUUDh2 pic.twitter.com/RUcF80h2Xv
சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 9 ஃபோர், 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 86 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தனது ஒருநாள் கெரியரில் பெஸ்ட் ஸ்கோரினை எடுத்துள்ளார். இதுவரை எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். மேலும், 20 ஃபோர், 14 சிக்ஸர்களை விளாசியுள்ளார். எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு, ஏழு போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். அதில், மொத்தமாக 262 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ரைக் ரேட் 110.55ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க.,
IND vs SA 1st ODI LIVE Score: போராடித் தோற்ற இந்தியா! சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!