Rohit sharma : ராசியில்லாத அடிலெய்டு! ரோகித்தின் தொடர் சொதப்பல்! இந்தியாவுக்கு புதுதலைவலி..
Border Gavaskar Trophy : அடிலெய்டு மைதானத்தில் ரோகித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காதது இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயராகும் வகையில் கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் பேட்டிங் வரிசை இந்திய அணிக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளது.
முதல் டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது, இந்தப் போட்டியில் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்காக ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை. இந்த இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Watch video : பண்ட்டாக மாறிய பூரன்.. படுத்துக்கொண்டே சிக்ஸ்! பூரனின் அசாத்தியமான ஷாட்!
மீண்டும் இணைந்த ரோகித்:
இதற்கிடையில் ரோகித் சர்மா இந்திய அணியில் மீண்டும் இணைந்து கான்பெர்ராவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார். ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிராக நடந்த ரோகித் இந்த போட்டியில் மூன்று ரன்களில் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
தொடர்ந்து சொதப்பும் ரோகித்:
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய தொடக்க ஆட்டக்காராக இருந்து வரும் ரோகித் கடந்த போட்டிகளாக சொல்லிக்கும்படியான ஃபார்மில் இல்லை. முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ரோகித் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவாரா அல்லது அணியின் நலனுக்காக பின்வரிசையில் ஆடுவாரா என்கிற குழப்பமும் நிலவி வருகிறது.
Rohit Sharma dismissed for 3 runs in the Practice match. pic.twitter.com/5og2ftfN6y
— Johns. (@CricCrazyJohns) December 1, 2024
அடிலெய்டில் ரோகித்:
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தைப் பார்த்தால், அது ஏமாற்றமளிக்கும் வகையில் தான் உள்ளது. இந்த மைதானத்தில் அவர் விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில், அவர் வெறும் 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், இதன் காரணமாக அடிலெய்டு மைதானத்தில் அவரது சராசரி 21.75 க்குக் கீழே உள்ளது. அவர் இன்னும் அந்த மைதானத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தமாக அடிலெய்டு மைதானத்தில் 11 போட்டிகள் விளையாடிய ரோகித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இது நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.