மேலும் அறிய

IND vs NZ Test:சர்ஃபராஸ் கானுக்காக புதிய சமையல்காரர்; விளக்கம் சொன்ன சூர்யகுமார் யாதவ்!

சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஆட்டத்தின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்களை குவித்தது.இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ் கானின் சதத்துடன் இந்திய அணி 462 ரன்களை எடுக்க, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. அதன்படி ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று அந்த இலக்கை எளிமையாக எட்டிய நியூசிலாந்து அணி தங்களது வெற்றி பதிவு செய்தது.

சர்பராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர்:

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியாக விளையாடி ஓரளவிற்கு இந்திய அணியை மீட்டனர். அந்தவகையில் சுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அவருடைய இடத்தில் தான் சர்பராஸ் கான் விளையடினார்.

அதன்படி சிறப்பான ஆட்டத்தின் மூலம் அடுத்து டெஸ்ட் போட்டியிலும் சர்ஃபராஸ் கான் இடம் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினாலும் அவருடைய பிட்னஸ் விசயத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்திய அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் ரிஷப் பண்ட் தரப்பில் சர்பராஸ் கானுக்கு உதவியாக ஒரு சமையல்காரர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சர்பராஸ் கானின் உணவு பழக்கங்களை கையாள்வார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன்பாக உடலமைப்பில் சிறந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். 

கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் முக்கியமானது என்பதை சர்ஃபராஸ் கானும் உணர்ந்திருக்கிறார். அதற்கான பயிற்சியில் அவர் தீவிரமாக உள்ளார். அதேபோல் அவரின் உடல் பருமனாக இருந்தாலும், அசால்ட்டாக 450 பந்துகளை விளையாடக் கூடியவர். ரஞ்சி டிராபியில் 2 முறை முச்சதம் விளாசி இருக்கிறார். அவரிடம் திறமை இருக்கிறது. எப்போதும் அவர் பெரிய சதங்களை விளாச வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்" என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
Royal Enfield EV: ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
Embed widget