Watch Video: அடுத்தடுத்து 5 சிக்ஸர் விளாசிய ஆர்.சி.பி. வீரர்.. ரசிகர்களுக்கு விருந்தான மிடில்செக்ஸ் - சர்ரே டி20..!
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் ஆர்.சி.பி. வீரர் ஜேக்ஸ் 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
நவீன கிரிக்கெட் உலகில் வீரர்களும், ரசிகர்களும் மிகவும் அதிகளவில் விரும்பும் ஆட்டமாக டி20 போட்டி மாறியுள்ளது. ஏனென்றால், ஆட்டம் தொடங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியுடன் தொடங்குவதால் இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஐ.பி.எல். வந்த பிறகு டி20 இன்னும் விறுவிறுப்பான ஆட்டமாக மாறிவிட்டது.
அடுத்தடுத்து 5 சிக்ஸர்:
இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் மிடில்செக்ஸ் – சர்ரே அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மிடில்செக்ஸ் முதலில் பந்துவீசியது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய சர்ரே அணிக்கு வில் ஜேக்ஸ் – எவன்ஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசினார்.
குறிப்பாக, ஆட்டத்தின் 10வது ஓவரை ஹோலிமேன் வீசினார். அவர் வீசிய முதல் பந்தை ஜேக்ஸ் சிக்ஸருக்கு விளாசினார். சுழற்பந்துவீச்சாளரான அவர் வீசிய 2வது பந்தையும் ஜேக்ஸ் சிக்ஸருக்கு விளாச, அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விளாசி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
அதன்பின்பும், அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஹோலிமேன் திணற 4வது பந்தும், 5வது பந்தும் சிக்ஸருக்கு சென்றது. ஒரு வழியாக அவர் கடைசி பந்தில் மட்டும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஜேக்ஸ் கடந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு காயம் காரணமாக விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Will Jacks yesterday smashed 96(45) including 8 fours and 7 Sixes in T20 Blast. This is brutal hitting by Will Jacks, Insane.
— CricketMAN2 (@ImTanujSingh) June 23, 2023
He smashed 5 Sixes in a row, 6,6,6,6,6 in an over - The player to watch out for RCB in IPL 2024. pic.twitter.com/cC21oSCayR
252 ரன்கள் அடித்தும் தோல்வி:
அவர் விளாசியது கடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ரிங்குசிங் விளாசிய 5 சிக்ஸர்களை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. இந்த போட்டியில் வில் ஜேக்ஸ் 45 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசிய நிலையில் 96 ரன்களுக்கு அவுட்டானர். மற்றொரு தொடக்க வீரர் எவன்ஸ் 37 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். 14.1 ஓவர்களில் 191 ரன்களை எடுத்திருந்தபோது வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சர்ரே அதன்பின்பு பொறுப்பில்லாமல் ஆடி விக்கெட்டுகளை இழந்தது. சாம்கரண் 6 ரன்னிலும், ஓவர்டன் 18 ரன்களிலும், டாம் கரண் 6 ரன்களிலும் அவுட்டாக 20 ஓவர்களில் 252 ரன்களை சர்ரே எடுத்தது.
253 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி பேட்டிங்கில் மிரட்டினர். கேப்டன் எஸ்கினாசியும், கிராக்னெல்லும் பவுண்டரிகளும் சிக்ஸர்ளும் விளாசினர். 6.3 ஓவர்களில் அந்த அணி 90 ரன்களை எட்டியது. அப்போது, 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் கிராக்னெல் அவுட்டானார். அடுத்து வந்த மேக்ஸ் ஹோல்டன் தன் பங்குக்கு மிரட்ட மிடில்செக்ஸ் ரன் வேட்டை குறையவே இல்லை.
கேப்டன் எஸ்கினாசி 39 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்து வந்த ரியான் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். அவர் 24 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 3வது விக்கெட் இழக்கும்போதே மிடில்செக்ஸ் அணி 243 ரன்களை எட்டியிருந்தது. அடுத்து வந்த ஜேக் டேவிஸ் சிக்ஸர், பவுண்டரி விளாசியதால் 19.2 ஓவர்களில் மிடில்செக்ஸ் அணி 19.2 ஓவர்களில் 254 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.
மேக்ஸ் ஹோல்டன் 35 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்களுடனும், ஜேக் டேவிஸ் 3 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
மேலும் படிக்க: Natarajan Cricket Ground: 'கையிலே ஆகாசம்.. கொண்டுவந்த உன் பாசம்..’ : இளம் வீரர்களுக்கான நடராஜனின் கிரிக்கெட் மைதானம் திறப்பு..
மேலும் படிக்க: Champions Trophy 2013: ஹர்பஜனால் முடியாது..! அஸ்வினால் முடியும்..! சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தோனியின் படை