Jasprit Bumrah: கனவிலும் நினைக்கல.. பும்ராவை பாராட்டிய ரவி சாஸ்திரி! ஏன் தெரியுமா?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களான மெக்ராத், மலிங்கா உள்ளிட்டோர் வரிசையில் ஜஸ்ப்ரித் பும்ராவை பார்ப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அசத்தும் பும்ரா:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அதாவது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கியாமன விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களான மெக்ராத், மலிங்கா உள்ளிட்டோர் வரிசையில் ஜஸ்ப்ரித் பும்ராவை பார்ப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
கனவில் கூட நினைக்கவில்லை:
இது தொடர்பாக பேசிய அவர், “முன்பெல்லம் உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யக்கூடிய அளவிற்கான பந்து வீச்சளர்கள் இந்திய அணியில் இல்லை. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவின் வருகையால் இந்த நிலை மாறியுள்ளது. வெள்ளை பந்து கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பது அரிது:
பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர். மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம்.
நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பந்து வீச்சின் மூலம் நாம் பார்க்க முடிகிறது” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
முன்னதாக இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதாவது குரூப் எ வில் விளையாடி வரும் இந்திய அணி தாங்கள் விளையாடியுள்ள 3 போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அடுத்த போட்டியை ஜூன் 15 ஆம் தேதி கனடா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டியை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: T20 World Cup 2024: அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு அல்வா வாய்ப்பு! என்ன சொல்றீங்க?
மேலும் படிக்க: Aaron Jones IPL 2025: கோடிகளில் புரளப்போகும் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் - எப்படி தெரியுமா?