T20 World Cup 2024: அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு அல்வா வாய்ப்பு! என்ன சொல்றீங்க?
T20 World Cup 2024 Semi Final: 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
டி20 உலகக்கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி குரூப் A வில் இந்திய அணியும், குரூப் B யில் ஆஸ்திரேலிய அணியும், குரூப் C யில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் குரூப் D யில் தென்னாப்பிரிக்க அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
அதேபோல் இதில் இன்னும் 4 இடங்கள் மீதம் இருக்கிறது. இதில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இச்சூழலில் தான் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எளிதான இரண்டு அணிகளுடன் மோதுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எளிமையான அணிகள்:
இதற்கான முக்கிய காரணம் என்னெவென்றால் பலமான அணிகளாக காணப்படும் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு சற்று கடினமானதாகவே உள்ளது. அந்த வகையில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
அப்படி இந்த மூன்று அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் எளிமையானதாக அமையும். அப்படி இந்த அணிகளை வீழ்த்தினால் இந்திய அணி எளிமையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:
அதேநேரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியுடன் சூப்பர் 8 சுற்றில் மோதினால் இது கடினமான ஒன்றாக அமையும். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி தான் இந்திய அணியுடன் மோதுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டாலும் கூட இரண்டு அணிகளை எளிமையாக வீழ்த்தி விட்டால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க: T20 World Cup 2024: பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்துக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு இருக்கா?
மேலும் படிக்க: Aaron Jones IPL 2025: கோடிகளில் புரளப்போகும் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் - எப்படி தெரியுமா?