PM Modi letter : ”இப்படி பண்ணிட்டீங்களே தம்பி” இதை நான் எதிர்ப்பார்க்கல! அஷ்வினுக்கு பிரதமர் மோடி கடிதம்
Ravichandran Ashwin : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெற்றதை தனக்கு அதிர்ச்சியளித்ததாக பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக வீரர் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அஷ்வின் ஓய்வு:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர்ரான ரவி அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அஸ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கேட்டுகளும், 3503 ரன்களும் அடித்துள்ளார். அதே போல 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
பிரதமர் மோடி அஸ்வினுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சிறந்த ஆல்-ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 இன் மூன்றாவது போட்டிக்குப் பிறகு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வின் ஓய்வு பெற்றவுடன், இந்திய அணி ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர். இது குறித்து பிரதமர் மோடியும் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி எழுதிய கடிதம்:
அஸ்வினின் ஓய்வு 'கேரம் பால்' போன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் அவரது நாட்டிற்காக செய்த அனைத்திற்கும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி எழுதியுள்ள அந்த கடிதத்தில்
'இந்த கடிதத்தை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த உங்களின் அறிவிப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லோரும் இனிய இடைவேளைக்காகக் காத்திருந்தபோது, நீங்கள் கேரம் பந்தை வீசினீர்கள். இந்த முடிவை எடுப்பது உங்களுக்கு எளிதாக இருந்திருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
Allu Arjun : ”கவனமா பேசுங்க.. கொஞ்சம் தள்ளியே இருங்க!” ரசிகர்களுக்கு அல்லு அர்ஜூன் அறிவுரை!
'உங்கள் கடின உழைப்பிற்கும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அணிக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு, மக்கள் எப்போதும் ஜெர்சி எண் 99 ஐ மிஸ் செய்வார்கள் . நீங்கள் கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைத்த தருணத்தை கிரிக்கெட் பிரியர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று மேலும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: Indian Cricketers as Youtubers: நாங்களும் யூடியுபர்ஸ் தான்! யூடியுபில் கலக்கும் கிரிக்கெட்டர்கள்.. எவ்வளவு subscribers தெரியுமா?
மேலும் அவர் கூறியதாவது, எதிர் அணிக்கு எதிராக எப்படி பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்கள் என்ற உணர்வு எப்போதும் இருக்கும். 'சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எடுத்த 765 விக்கெட்டுகள் அனைத்தும் சிறப்பானவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 'பிளேயர் ஆஃப் தி சீரிஸ்' விருதுகளை வென்றது, பல ஆண்டுகளாக அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகிறது” என்று பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.