Afridi on Gambhir: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்..கம்பீரை புகழ்ந்து தள்ளிய அப்ரிடி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி ஆதரவு தெரிவித்துளளார்.
கம்பீருக்கு ஆதரவு:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஆதரவு குரல் வந்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேர்மையாக பேசுவார்:
இது தொடர்பாக அவர் பேசுகையில், "இது ஒரு புதிய வாய்ப்பு மற்றும் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை கம்பீர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சில நேரங்களில் நான் அவரது நேர்காணல்களை பார்ப்பேன். அவர் மிகவும் நேர்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் அவர் பேசுவதில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்பது இது தான் முதல் முறை.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கம்பீர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் லக்னோ அணியில் பயிற்சியாளராக இருந்தார்.
கம்பீரின் பதவிக்காலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு முறை ப்ளேஆப் சுற்றுக்கு எட்டியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் அந்த அணியை ஐபிஎல் கோப்பையை வெல்ல வைத்தார்." என்று அப்ரிடி கூறியுள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் படிக்க: Gautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐGautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐ
மேலும் படிக்க: ICC Champions Trophy: நாங்க பாகிஸ்தானுக்கு வரல; இதுவேனா ஓகே: ஐடியா கொடுக்கும் பிசிசிஐ! ஏற்குமா ஐசிசி?