Rizwan On Kohli : "நமது விராட்கோலியை முதன்முறை சந்தித்தபோது..." : நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த பாகிஸ்தான் வீரர்..
விராட்கோலியை முதன்முறை சந்தித்தது மிகவும் அற்புதமாக இருந்தது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் விராட்கோலி. இவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் பற்றிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முகமது ரிஸ்வான் விராட்கோலியை நமது விராட்கோலி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அந்த போட்டியில் அவர் கூறியதாவது, “ நாம் அனைவரும் ஒரே குடும்பம். ஒருவேளை நான் நமது விராட்கோலி என்று கூறினால், நான் ஒன்றும் தவறாக கூறவில்லை. அல்லது நமது புஜாரா அல்லது நமது ஸ்மித் அல்லது நமது ரூட். ஏனென்றால், நாம் அனைவரும் ஒரே குடும்பம்.
விராட்கோலியை முதன்முறை சந்திக்கும் முன்பு அவரைப் பற்றி மற்ற வீரர்கள் சொல்லி நான் கேள்விபட்டது, விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமானவர் என்றுதான் கேள்விபட்டிருந்தேன். ஆனால், அவரை சந்தித்த பிறகு, அந்த போட்டிக்கு பிறகு அது ஒரு அற்புதமானதாக இருந்தது. ஒரு வேளை நான் அவரை நமது விராட்கோலி என்று கூறினால், நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் ஆகும். நாங்கள் களத்தில் இறங்கிவிட்டால் கண்டிப்பாக யாரும் பெரிய நட்சத்திரம் கிடையாது.
களத்தின் உள்ளே பந்தபாசம் கிடையாது. ஆனால், களத்தின் வெளியே நாங்கள் கோலியை சந்தித்தபோது, மற்றும் தோனி உள்ளிட்ட சில வீரர்களை சந்தித்தபோது, நாங்கள் அன்புடனும், அரவணைப்புடனும் சந்தித்துக்கொண்டோம். எந்த மாற்றமுமில்லை. கவுண்டி கிரிக்கெட்டிலும், புஜாரா என்னுடன் மிகுந்த அன்புடனே இருந்தார். உண்மையில் நான்தான் அவரைத் திட்டிக்கொண்டே இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். விராட்கோலியும் அதேபோல இருந்தார்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்தாண்டு உலக கோப்பை டி20 தொடரில் முதல் போட்டியில் ஆடியபோது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் முகமது ரிஸ்வானின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் முடிந்ததும் விராட்கோலியை ரிஸ்வான் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க : IND vs SA: முதல் டி20 போட்டிக்கு யார் யாரை அணியில் எடுப்பது? - இந்திய அணியின் திட்டம் என்ன?
மேலும் படிக்க : IND vs SA: “நான் இவரைப்பார்த்துதான் விக்கெட் கீப்பிங் தேர்வு செய்தேன்” - உண்மையை கூறிய ரிஷப் பண்ட்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்