இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே குடிமகனுடன் திருமணம் - பாக்., நடிகை கொடுத்த ஆஃபர்!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் 42ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால் அந்நாட்டு குடிமகனை திருமணம் செய்து கொள்வேன் என்று பாக்., நடிகை அறிவித்தார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் 42ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால் அந்நாட்டு குடிமகனை திருமணம் செய்து கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தனது டுவிட்டர் கணக்கின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இவரது அறிவிப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, உலகக் கோப்பை தொடரில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சூப்பர்12 குரூப் 2 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அந்த அணி பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வலுவான பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
பெர்த் நகரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 129 ரன்களில் ஆட்டமிழந்தது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
ஜிம்பாப்வே சூப்பர் 12 சுற்றில் வென்ற ஒரே ஆட்டம் அதுதான். இந்த நிலையில், 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, ஜிம்பாப்வே அணியை வரும் 6ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ராகுல் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார். கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, பலம் வாய்ந்த இந்தியாவை சந்திக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் நடிகை செஹர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அதியசத்தக்க வகையில் இந்தியாவை ஜிம்பாப்வே வீழ்த்தும் பட்சத்தில் அந்நாட்டைச் சேர்ந்தவரை நான் திருமணம் செய்து கொள்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவரது ட்வீட்டுக்கு கீழ் கமென்ட் செக்ஷனில் நானும் ஜிம்பாப்வேகாரன் தான் என்று ஜாலியாக நெட்டிசன்களை ரிப்ளை அனுப்பி வருகின்றனர்.