மேலும் அறிய

PAK vs NED Match Highlights: சுத்து போட நினைத்த நெதர்லாந்து; சுழற்றி அடித்த பாகிஸ்தான்; 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

PAK vs NED ODI World Cup 2023 Match Highlights: முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 286 ரன்கள் சேர்த்தது. 

PAK vs NED WC 2023: உலகக் கோப்பைக் கிரிக்கெட் 2023இல் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானும் நெதர்லாந்தும் மோதிக்கொண்டன. இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி  களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 286 ரன்கள் சேர்த்தது. 

அதன் பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி பாகிஸ்தானின் வேகத்துக்கு ஈடு கொடுக்குமா என அனைவரும் யோசித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சினை அசால்டாக எதிர்கொண்டது. பொறுமையாக ரன்கள் குவித்த நெதர்லாந்து அணி கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி வந்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் வீழ்த்துவதில் தொடக்கத்தில் சிரமாக இருந்தது. 

நெதர்லாந்து அணி தனது முதல் விக்கெட்டினை 28 ரன்னிலும் 2வது விக்கெட்டினை 50 ரன்னிலும் இழந்தாலும் அதன் பின்னர் கைகோர்த்த விக்ரமஜித் சிங் மற்றும் லீதி கூட்டணி பாகிஸ்தான் பந்து வீச்சுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. இவர்களின் கூட்டணியை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் செய்த முயற்சிகளுக்கு உடனே பலன் கிடைக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த விக்ரமஜித் சிங் அரைசதம் விளாசினார். விக்ரமஜித் சிங் 67 பந்தில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். 

PAK vs NED Match Highlights: சுத்து போட நினைத்த நெதர்லாந்து; சுழற்றி அடித்த பாகிஸ்தான்; 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்

அதன் பின்னர் வந்த தேஜா மற்றும் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஹாரிஸ் ராஃப் வீசிய 27வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பாகிஸ்தான் அணிக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்ததுடன் போட்டியை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முக்கியமான நகர்வாக மாறியது. 

30 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 20 ஓவர்களில் நெதர்லாந்து வெற்றிக்கு 137 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பாக விளையாடி வந்த லீதி தனது விக்கெட்டினை முகமது நவாஸ் பந்து வீச்சில் இழக்க, போட்டி முழுவதும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. 

PAK vs NED Match Highlights: சுத்து போட நினைத்த நெதர்லாந்து; சுழற்றி அடித்த பாகிஸ்தான்; 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

-நெதர்லாந்து ஆல் அவுட் - பாகிஸ்தான் வெற்றி 

இறுதியில் நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீசிய 6 பந்து வீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றினர்.  குறிப்பாக ஹாரீஸ் 3 விக்கெட்டுகளும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

IND vs AUS World Cup 2023: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்குகிறாரா சென்னை மைந்தன் அஸ்வின்?

Tilak Varma: என்னோட அம்மாவுக்காகத்தான்! டாட்டூவை காட்டி நெகிழ்ச்சி அடைந்த திலக் வர்மா! ஏன் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
கரூர்: புரட்டாசி மாத பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர்: புரட்டாசி மாத பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்
Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
IND Vs Ban 2nd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா? வங்கதேசம் உடன் 2வது டி20 போட்டியில் இன்று மோதல்..!
IND Vs Ban 2nd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா? வங்கதேசம் உடன் 2வது டி20 போட்டியில் இன்று மோதல்..!
Embed widget