மேலும் அறிய

Tilak Varma: என்னோட அம்மாவுக்காகத்தான்! டாட்டூவை காட்டி நெகிழ்ச்சி அடைந்த திலக் வர்மா! ஏன் தெரியுமா?

வங்கதேச அணியினரின் பந்து வீச்சை சிக்ஸருக்கு பறக்கவிட்ட திலக் வர்மா, 25 பந்துகளில் அரைசதம் (55) அடித்தார். அந்த அரைசதத்தை தனது அம்மாவிற்கு அர்பணித்தார்.

ஆசிய போட்டி அரையிறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, அதனை தனது அம்மாவிற்கு அர்பணித்து இடுப்பில் குத்தியிருக்கும் டாட்டூவை காட்டி கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இளம் நட்சத்திரம்:

ஆந்திராவைச் சேர்ந்த திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் அறிமுகமானவர்.

அந்த போட்டியில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர். அடுத்ததாக ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடினார். இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா பந்து வீச்சிலும் இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.


இச்சூழலில், இன்று (அக்டோபர் 6)  வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி விளையாடியது. இதில் முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்தது. 

அதில், 2 ஓவர்கள் வீசிய திலக் வர்மா 5 ரன்கள் மட்டுமே கொடுத்து தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.  பின்னர், களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜெய்ஸ்வால் டக் அவுட்டகி வெளியேற, மறுபுறம் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

அதில், இரண்டு பந்துகள் பொறுமையாக ஆடிய திலக் வர்மா, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். பின்னர், அடுத்தடுத்த ஓவர்களில் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். இதனிடையே இந்த ஜோடி 18 பந்துகளில் 50 ரன்களை கடந்தது.

 

 

அரைசதம் விளாசிய திலக் வர்மா:

இச்சூழலில், வங்கதேச அணியினரின் பந்து வீச்சை சிக்ஸருக்கு பறக்கவிட்ட திலக் வர்மா, 25 பந்துகளில் அரைசதம் (55) அடித்தார். அந்த அரைசதத்தை தனது அம்மாவிற்கு அர்பணித்தார்.

டாட்டூவில் தயின் முகம்:

அதன்படி, தனது இடுப்பு பகுதியில் டாட்டூவாக அவர் போட்டிருக்கும் தனது தாயின் முகத்தை ஜெர்சியை விலக்கி காட்டினார். அப்போதை ரசிகர்கள் உற்சாகம் அடைந்து தங்களது மகிழ்ச்சியை தெரியபடுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடயை திலக் வர்மா இது பற்றி பேசுகையில், ”அந்த கொண்டாட்டம் எனது அம்மாவிற்காக தான்.கடந்த சில போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதேபோல் இந்த அரைசத்தை எனது சமைராவிற்கு (ரோகித் சர்மாவின் மகள்) அர்பணிக்கிறேன்.

மேலும், ஒரு பந்துவீச்சாளராக இன்னும் முன்னேற்றமடைய விரும்புகிறேன். ஆல்ரவுண்டராக விளையாடுவதையே இலக்காக வைத்துள்ளேன். பந்துவீச்சில் முன்னேற்றமடைய அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க: Pak vs Ned LIVE Score: 287 ரன்களை நோக்கி களம்.. இமாலய இலக்கை எட்டி பாகிஸ்தானை துவம்சம் செய்யுமா நெதர்லாந்து

மேலும் படிக்க: Asian Games 2023: அபாரம்! ஆசிய கோப்பை ஹாக்கியில் தங்கம்.. ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget