ODI World Cup 2023 AFG vs ENG: புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கையை முந்திய ஆப்கானிஸ்தான்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முன்னதாக, கடந்த 7 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி, அதற்கு அடுத்ததாக கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்தது.
வீழ்ந்த இங்கிலாந்து அணி
இதனிடையே இன்று (அக்டோபர் 15) டெல்லி அருண் ஜேட்லீ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியானன இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
ஆஸ்திரேலிய அணியை முந்திய ஆப்கானிஸ்தான்:
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிரடியாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில், 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் குவித்தது.
அதில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் அடித்தார். அதில், 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகள் அடக்கம். அதேபோல் இக்ராம் அலிகில் 66 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம்.
இதனிடையே 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்படி, 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.
அந்த வகையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
அதன்படி, பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு அதாவது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆறாவது இடத்திற்கு முன்னேற்றம்:
புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், 5 வது இடத்தில் இங்கிலாந்தும், 2 புள்ளிகள் பெற்று ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்த இடத்திலே இலங்கை, நெதர்லாந்து அணிகள் உள்ளன.
மேலும் படிக்க: World Cup 2023: இந்தியா பாகிஸ்தான் போட்டி... பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்! வீடியோ!
மேலும் படிக்க: IND vs PAK: இதுவா நேரம்...கோலியிடம் ஜெர்ஸியை பரிசாக பெற்ற பாபர் அசாம்... வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்!