World Cup 2023: இந்தியா பாகிஸ்தான் போட்டி... பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்! வீடியோ!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி போட்டியில் ரசிகர் ஒருவருக்கும் பெண் காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்கள் எதிர் பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 12 வது லீக் போட்டி நேற்று (அக்டோபர் 14) நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்படி, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனிடையே முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில், பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ் , ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தினர்.
பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பெற்றது.
Fight between police officer and audience during ind vs pak match😓 pic.twitter.com/jp0742HqzW
— S. (@mochacoldcoffee) October 15, 2023
பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்:
முன்னதாக, மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே, அந்த பெண்காவலர் அந்த இளைஞரை ஓங்கி அறைந்தார். அப்போது அந்த இளைஞரும் பெண் காவலரை கையை உயர்த்தி அடிக்கிறார்.
அதை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலர் பெண் காவலருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரம் அந்த இளைஞருக்கு ஆதரவாகவும் சிலர் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ENG Vs AFG Score LIVE: மிரட்டும் இங்கிலாந்து.. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஃப்கானிஸ்தான்..!
மேலும் படிக்க: Ind Vs Pak Worldcup: மத அரசியலும், வன்ம வியாபாரமும் கலந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. மைதானத்தில் இது அவசியமா?