CWC 2023: எல்.பி.டபிள்யூ.வை கோட்டைவிட்ட இந்தியா... ஆட்டத்தின் போக்கை மாற்றிய தன்சித் ஹசன்!
வங்கதேச வீரர் தன்சித் ஹசன் விளையாடியபோது எல்பிடபிள்யூக்கு முறையீடு செய்ய இந்திய அணி தவறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (அக்டோபர் 19) நடைபெறும் 17 வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.
எல்பிடபிள்யூ கேட்க மறந்த இந்தியா:
அதன்படி, முதல் நான்கு ஓவர்களில் வங்கதேச அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த நான்கு ஓவர்களையும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வீசினர்.
அதில் பும்ரா வீசிய யாக்கர் பந்தை தன்சித் ஹசன் பேட் மீது தடுத்தார். அப்போது இந்திய அணி வீரர்கள் எல்பிடபிள்யூ கேட்பார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் இந்திய அணி வீரர்கள் யாரும் எல்பிடபிள்யூ கேட்டு முறையீடு செய்யவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய தன்சித் ஹசன்:
தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடி வரும் தன்சித் ஹசனின் எல்.பி.டபிள்யூ-வை இந்திய அணி தவறவிட்டதால் அவர் ஆட்டத்தை போக்கையே மாற்றினார். அதன்படி, இந்த உலகக் கோப்பையின் முதல் அரைசதத்தை இந்தியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளார். 51 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகளில் விளாசினார். அதேபோல் மொத்தம் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இவ்வாறாக 51 ரன்களை தன்னுடைய அணிக்கு எடுத்துக் கொடுத்தார். முதல் நான்கு ஓவர்களில் வெறும் 6 ரன்களே எடுத்திருந்த வங்கதேச அணிக்கு அடுத்தடுத்த ஓவர்களில் தன்னுடைய அதிரடியை வெளிபடுத்தியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி 93 ரன்களை குவித்தது.
எல்பிடபிள்யூவில் விக்கெட்டை பறிகொடுத்த தன்சித்:
முன்னதாக எல்பிடபிள்யூயில் இருந்த தப்பித்த தன்சித் ஹசனை எல்பிடபிள்யூ முறையிலேயே வீழ்த்தினார் இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். அவர் வீசிய 14 வது ஓவரின் 4 பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேநேரம் மறுபுறம் லிட்டன் தாஸ் 67 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜே வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-முறையில் தான் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 256 ரன்களை எடுத்தது.
மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலி இன்று ஜொலித்தால் குவியும் சாதனைகள்.. சச்சின், ஜெயவர்த்தனேவை முந்த வாய்ப்பு!
மேலும் படிக்க: Virat Kohli: உலகக் கோப்பையில் விராட் கோலி பவுலிங்; உடனே வெளியேறிய ஹர்திக் பாண்டியா; என்ன ஆச்சு?