மேலும் அறிய

Virat Kohli: விராட் கோலி இன்று ஜொலித்தால் குவியும் சாதனைகள்.. சச்சின், ஜெயவர்த்தனேவை முந்த வாய்ப்பு!

புனேவில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ளது. 

2023 ம் ஆண்டு நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் நான்காவது போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. புனேவில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ளது. 

விராட் கோலி இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை படைப்பார். கோலி இதுவரை 510 போட்டிகளில் 566 இன்னிங்ஸ்களில் 25, 923 ரன்கள் எடுத்துள்ளார். கோலி அடுத்த 34 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26, 000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே 26,000 ப்ளஸ் ரன்களை எடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34, 357 ரன்கள் குவித்த டெண்டுல்கர் முன்னிகை வகித்தார். அவரை தொடர்ந்து இலங்கையின் குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 இன்னிங்ஸ்களில் 28, 016 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்   560 போட்டிகளில் 668 இன்னிங்ஸ்களில் 27,483 ரன்கள் எடுத்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மஹேல ஜெயவர்த்தனே 652 போட்டிகளில் 725 இன்னிங்ஸ்களில் 25, 957 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். 

ஜெயவர்த்தனேவை முந்தும் வாய்ப்பு: 

இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விராட் கோலி வெறும் 35 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறுவார். 

ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: 

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி 8வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால், ஹகிப் அல் ஹாசன் மற்றும் ரோஹித் சர்மாவை முந்துவதற்கு வாய்ப்பும் உள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனையைப் பார்த்தால், இதுவரை சிறப்பாகவே உள்ளது. விராட் கோலி இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 807 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 136 ரன்கள் எடுத்ததே கோலியின் சிறந்த ஸ்கோராகும். அவரது சராசரி 67.25.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget