(Source: Poll of Polls)
Mohammed Shami:ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? காட்டமான முகமது ஷமி
ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை என முகமது ஷமி கூறியுள்ளார்.
ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை என முகமது ஷமி கூறியுள்ளார்.
ஓய்வில் இருக்கும் ஷமி:
உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் ஊசி போட்டுக் கொண்டு உலகக்கோப்பை தொடரை முழுமையாக விளையாடினார். இதன்பின் ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர் ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை தொடரை மிஸ் செய்த முகமது ஷமி, 3 மாதங்களுக்கு முன்பாக பயிற்சியை தொடங்கினார். முதலில் தனது பண்ணை வீட்டில் வைத்து சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்ட முகமது ஷமி, பின்னர் பவுலிங் செய்வதற்கான ரன் அப்பிலும் ஈடுபட்டார்.
ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்?
இதன் மூலமாக ஷமி பழைய நிலைக்கு திரும்பியதாக பார்க்கப்பட்டது. ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடரில் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிய வந்தது. இதன்பின் முகமது ஷமி நேரடியாக என்சிஏவிலேயே பயிற்சியை தொடங்கினார். இதனால் முகமது ஷமி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கட்டாயம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அதை ஷமி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் வெளியேறியதாக பிசிசிஐயோ அல்லது நானோ குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வரும் இதுபோன்ற செய்திகளுக்கு கவனம் செலுத்துவதை நிறுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்"என கூறியுள்ளார்.