மேலும் அறிய

AB de Villiers: 2019 உலகக்கோப்பைக்கு முன்பே ஓய்வு பெற்றது ஏன்? - மனம் திறந்த ஏபி டிவில்லியர்ஸ்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, தான் வலது கண் பார்வை குறைபாட்டுடன் விளையாடியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, தான் வலது கண் பார்வை குறைபாட்டுடன் விளையாடியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ்:

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.  கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். ஒரு நாள் போட்டியில் 2005ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8 ஆயிரத்து 765 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 228 ஒரு நாள் போட்டிகளில்  விளையாடி 9 ஆயிரத்து 577 ரன்கள் எடுத்துள்ளார். இவரை ரசிகர்கள் 360  டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடினார்கள். அதேபோல், அதிவேக அரைசதம், சதம் மற்றும் அதிவேகமாக 150 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையெல்லாம் இவர் வசம் தான் இருக்கிறது. 

இதனிடையே தான் கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  இந்நிலையில் தான், 35 வயதிற்கு பின் தன்னுடைய வலது கண் பார்வை மங்கலாக தெரிய துவங்கியதால் தான் முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

பார்வையை இழந்தேன்:

இது தொடர்பாக அவர் பேசுகையில், “எங்கள் வீட்டில் உள்ள தம்பி ஒருவர் தற்செயலாக குதிகாலால் என் கண்ணில் உதைத்தார். அதிலிருந்து நான் என்னுடைய வலது கண்ணில் பார்வை இழக்க ஆரம்பித்தேன். அதற்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர் என்னிடம் எப்படி உங்களால் கிரிக்கெட்டில் விளையாட முடிகிறது? என்று வியப்பாக கேட்டார். அதிர்ஷ்டவசமாக என்னுடைய கேரியரின் கடைசி 2 வருடங்களில் விளையாடுவதற்கு என்னுடைய இடது கண் உதவி செய்தது.

எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்த 2015 உலகக் கோப்பை தோல்வியிலிருந்து வெளி வருவதற்கு நீண்ட காலங்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து வந்த பின் என்னால் பழைய ஆர்வத்துடன் விளையாட முடியவில்லை. இருப்பினும் 2018இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கடைசியாக விளையாடுவேன் என்று நினைத்தேன், பொதுவாக என் மீது யாரும் கவனம் செலுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் தான் முன்கூட்டியே ஓய்வை அறிவித்தேன்”என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Maths தேர்வில் Match ஞாபகம்! விடைத்தாளில் ‘தல, தல’: தோனியால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டான சிறுவன்!

மேலும் படிக்க: T20 WC 2024: டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா விராட் கோலி? பி.சி.சி.ஐ. ஆலோசனை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget