மேலும் அறிய

வார்னே, இம்ரான் கான்.. பின்னுக்குத்தள்ளிய அஸ்வின் : 10 ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றி நாயகன்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 14 விக்கெட் வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தன்னுடைய 14-வது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தினார். 

ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்திருந்தார். மொத்தமாக அவர் இந்த தொடரில் 14 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இதன்காரணமாக  இந்தத் தொடரின் நாயகன் விருதை அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஷேன் வார்னே, ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் போன்ற பலரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 

சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள்: 

வீரர்கள் டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர்கள் தொடர் நாயகன் விருதுகள் 
முத்தையா முரளிதரன்(இலங்கை)   133  61  11
ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)   81  33  9
ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா)   166  61  9
இம்ரான் கான்(பாகிஸ்தான்)             88  28  8
ரிச்சர்ட் ஹாட்லி(நியூசிலாந்து)          86  33 8
ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா)       145  46  8
வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்)               104  43 7

இவ்வாறு முத்தையா முரளிதரனுக்கு பிறகு டெஸ்ட் தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராக அஸ்வின் வலம் வருகிறார். இவர் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் உடன் இணைந்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். காலிஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இனிவரும் தொடர்களில் ஒரு முறை தொடர் நாயகன் விருதை வென்றால் அஸ்வின் காலிஸையும் முந்தி தனியாக இரண்டாம் இடத்தில் இருப்பார். மேலும் அவர் முத்தையா முரளிதரனையும் தாண்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சொந்த மண்ணில் 300 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். அஸ்வினிற்கு முன்பாக அனில் கும்ப்ளே இந்தியாவில் 300 விக்கெட்டிற்கு மேல் எடுத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:

முத்தைய முரளிதரன்-493

ஆண்டர்சென்-402

அனில் கும்ப்ளே-350

வார்னே- 319

பிராட்-314

ரவிச்சந்திரன் அஸ்வின்-300* 

மேலும் சொந்த மண்ணில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

சொந்த மண்ணில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 300 விக்கெட்கள் கைப்பற்றியவர் பட்டியல் : 

48  முத்தையா முரளிதரன்

49  ரவிச்சந்திரன் அஸ்வின் 

52  அனில் கும்ப்ளே

65  வார்னே

71  ஆண்டர்சென்

76  பிராட் 

இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சிறப்பான சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறார். கிரிக்கெட் உலகில் ஒற்றை தமிழனாக 10 ஆண்டுகளுக்கு மேலாக அஸ்வின் கொடிக்கட்டி பறந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:வெற்றிக்கொடிகட்டு.. படையெடு படையப்பா- சர்வதேச கிரிக்கெட்டின் படையப்பா விராட்டின் புதிய சாதனை !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget