மேலும் அறிய

Rohit Sharma Net Worth: அடேங்கப்பா.. ஆடம்பர வாழ்க்கை வாழும் ரோஹித் ஷர்மா.. வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பு, சம்பளம், கார் மற்றும் வீடுகள் தொடர்பான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோஹித் ஷர்மா. ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே இந்த ஐபிஎல் சீசனில் இவர் வேறு அணிக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளிலும், 2013 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வரும் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டில் பல்வேறு நிறுவனங்களை முன்னிலை படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கிறது.

நிகர சொத்து மதிப்பு:

ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.214 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ சம்பளம்:

பிசிசிஐ வருடத்திற்கு ஒருமுறை போடப்படும் ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா A+ எனப்படும் முதல் தர பிரிவில் உள்ளார். இதனால் இவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என பெற்று வருகிறார்.

ஐபிஎல் சம்பளம்:

ஐபிஎல் சீசன்களை பொறுத்தவரை  2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக 16 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். 

வீட்டின் மதிப்பு:

மும்பையில் உள்ள வார்லி என்ற இடத்தில் 6000 சதுர அடி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைரா ஷர்மாவுடன் வசித்துவருகிறார். 29வது மாடியில் இருக்கும் இந்த வீட்டில் இருந்து பார்த்தால் அரபிக் கடலின் காட்சி தெளிவாக இருக்கும். அவரின் அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி ஆகும்.

கார் வகைகள்:

கார்வகைகளை பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவின் சேகரிப்பில் ஸ்கோடா லாரா, டொயோட்டா ஃபார்ச்சூனர், BMW X3, Mercedes GLS 400d மற்றும் BMW M5 (Formula One Edition) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அவர்  ரூபார்  3.15 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் வகை காரை வாங்கினார் என்பது கூடுதல் தகவல்.

ரோஹித் ஷர்மாவின் தொண்டு:

விளையாட்டைத்தாண்டி ரோஹித் ஷர்மா பல்வேறு தொண்டுகளை செய்துவருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை இலவசமாக அளித்து வருகிறார்.  கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு ரூ.80 லட்சத்தை வழங்கியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget