India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!
India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அஸ்வின் மீது எதிர்பார்ப்பு:
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் அஸ்வினின் சுழற்பந்து மாயாஜலத்தை இந்த தொடரில் எதிர்பார்க்காலாம்.
அதோடு இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். மேலும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார். அதேபோல், 10 விக்கெட்களை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுக்கும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சரித்திரத்தையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பார். இதானால் இந்த தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில், 25,227 பந்துகளை வீசி 29.69 என்ற சராசரியில் 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?