IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வதைத்த உமேஷ், அஷ்வின்.. முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்!
இந்தியாவிற்கு எதிரான டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவிற்கு எதிரான டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
A successful review by #TeamIndia as @y_umesh picks up his third wicket of the innings.
— BCCI (@BCCI) December 22, 2022
Nurul Hasan is out LBW!
Live - https://t.co/XZOGpeuLsj #BANvIND pic.twitter.com/pQ8T69KSBL
குறுகிய விவரம்:
இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டாக்காவில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணிக்காக மொமினுல் ஹக் 84 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்திருந்தார். உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜெய்தேவ் உனத்கட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Innings Break!
— BCCI (@BCCI) December 22, 2022
Four wickets apiece for @y_umesh & @ashwinravi99 and two wickets for @JUnadkat as Bangladesh are bowled out for 227 in the first innings.
Scorecard - https://t.co/XZOGpedaAL #BANvIND pic.twitter.com/ed2GOu09YQ
முதல் இன்னிங்ஸ்:
டாக்கா டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதன் போது ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ ஆகியோர் அணிக்கு ஓப்பன் செய்ய வந்தனர். ஜாகிர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷாண்டோ 24 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்கள் எடுத்து வெளியேற, மொமினுல் ஹக் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மெஹ்தி ஹசன் 51 பந்துகளில் 15 ரன்களுடனும், நூருல் ஹசன் 6 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். உள்ளே வந்த தஸ்கின் அகமது வந்த வேகத்தில் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேற, வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.
இந்திய அணி- கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
வங்கதேச அணி - நஜ்முல் ஹுசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), நுருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹ்தி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது