மேலும் அறிய

IND vs SA: ‘இழுத்து பூட்டுறோம்... யாரும் வந்திடாதீங்க...’ இந்தியா - தெ.ஆப்ரிக்கா தொடர் முழுக்க ரசிகர்களுக்கு தடை!

வீரர்களின் நலன் கருதி, இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என பிசிசிஐ, சிஎஸ்ஏ வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிமாகி வருகிறது. இதன்காரணமாக அங்கு மீண்டும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. 

அதனை தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முழுவதற்கும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கபட மாட்டாது என பிசிசிஐ, சிஎஸ்ஏ கிரிக்கெட் வாரியங்கள் சார்பில் முடிவு எட்டப்பட்டுள்ளது. வீரர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

முன்னதாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு 2000 பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க தென்னாப்பிரிக்க சங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், தொடர் ஆரம்பிக்கும் முன்பே அங்கு இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்திருக்கும் சிஎஸ்ஏ,  தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட், ஒரு நாள் தொடர்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. 

இதுவரை தென்னாப்ரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிடாத இந்திய அணி, இம்முறை முதல் முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது. மைதானம் சென்றடைந்த முதல் நாளில் இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் வீரர்கள்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியாங்க் பஞ்சல், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்,  புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget