Ind vs SA 2022: இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடர்: முழு அளவில் ரசிகர்களுக்கு அனுமதி..?
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூரு மைதானங்களில் டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் நடக்கும் மைதானங்களில் முழு அளவில் ரசிகர்களுக்கு அனுமதியளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுடன் ஐந்து டி20 ர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் போது இந்திய அணிக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் ரசிகர்களை முழுமையாக அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாம்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லாததால், கோவிட் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பிசிசிஐ வரவிருக்கும் தொடருக்காக மைதானங்களை நிரப்ப முன்வந்துள்ளது.
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு மைதானங்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் விளையாடுகிறது. ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், கடைசிப் போட்டி ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
“இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டி20 சர்வதேச தொடருக்கான மைதானங்களில் முழுமையாக ரசிகர்களை பிசிசிஐ அனுமதிக்கும்” என்று கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தன.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும், மே 29 அன்று போட்டியின் இறுதிப் போட்டியையும் நடத்தும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 பிளேஆஃப்களுக்கு பிசிசிஐ ஏற்கனவே முழு கூட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடருக்கான தென்னாப்பிரிக்கா 16 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்தது. இந்திய சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்கா டி20அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னல், டுவைன் ப்ரிடோரியஸ், கெய்கி ப்ரிடோரியஸ் , தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், மார்கோ ஜான்சன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்