Watch Video: இங்கிலாந்து மண்ணில் மீண்டும் ஜொலிக்கத் தவறிய கோலி..! ரசிகர்கள் சோகம்..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விராட்கோலி 11 ரன்களில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரிஷப்பண்ட் – ரவீந்திர ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் இந்திய 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
பயிற்சி ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக ஆடிய விராட்கோலி இந்த போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 46 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய விராட்கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தபோது நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்.
EDGBASTON GOES POTTY! 🎉
— England Cricket (@englandcricket) July 1, 2022
Scorecard/Videos: https://t.co/jKoipF4U01
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/X5G3B2HsRU
களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பாகவே இங்கிலாந்து பந்துவீச்சாளர் மேட்டி பாட்ஸ் பந்துவீச்சில் கிரிசீற்கு வெளியே சென்ற பந்தை விக்கெட்கீப்பரிடம் விடுவதற்காக பேட்டைத் தூக்கினார். ஆனால், பந்து இன்சைட் எட்ஜ்ஜாகி விராட்கோலியின் ஸ்டம்பை பதம்பார்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி இந்த இன்னிங்சிலும் சொதப்பியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : IND vs ENG 5th Test: இங்கிலாந்து டெஸ்ட்டில் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டது ஏன்..? இதுதான் காரணம்..!
சற்றுமுன் வரை இந்தியா தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ரிஷப்பண்ட் 87 ரன்களுடனும், ஜடேஜா 43 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். கிரிக்கெட் உலகின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஜாம்பவனாக திகழும் விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆவது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன்சிப் காரணமாக கடந்த சில காலமாக கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூன்று வடிவ போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். கேப்டன் பதவியை துறந்த பிறகும் அவரது பேட்டிங்கில் இன்னும் தனது கம்பேக்கை அளிக்கவில்லை. எதிர்வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு விராட்கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதால், இதே இங்கிலாந்து தொடரில் மீண்டும் தனது அசாத்திய பார்மை மீட்பார் என்று ரசிகர்கள் நம்பலாம்.
மேலும் படிக்க : MS Dhoni Treatment: என்னாச்சு நம்ம "தல"க்கு..? நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெறும் தோனி...!
மேலும் படிக்க : Rishabh Pant Record : 100 சிக்ஸர்கள் அடித்த இளம் இந்தியர்..! ரிஷப்பண்ட் புதிய சாதனை...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்