MS Dhoni Treatment: என்னாச்சு நம்ம "தல"க்கு..? நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெறும் தோனி...!
கிரிக்கெட் ஜாம்பவான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமாகியவர் எம்.எஸ்.தோனி. 40 வயதானாலும் தோனியின் உடல்தகுதி 25 வயதானவர்களுக்கு இணையாக இருப்பது எப்போதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தோனி மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, அவர் பிரபல மருத்துவமனைக்கு செல்லாமல் நாட்டு வைத்தியரிடம் மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார். தோனியின் சொந்த நகரமான ராஞ்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆசிரமத்தில் உள்ள வந்தன்சிங்கேர்வர் என்ற வைத்தியர் தோனிக்கு சிகிச்சை அளிக்கிறார். அவர் தோனியின் மூட்டு வலி தீர பாலுடன் சில மூலிகைகளை கலந்து மருந்தாக அளித்து வருகிறார்.
தோனி கடந்த ஒரு மாதமாக அவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தோனி அவரிடம் சிகிச்சைக்காக சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்காரணமாகவே தோனி நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
தோனிக்கு அவர் சிகிச்சை அளிப்பதற்கு ஒரு டோசுக்கு ரூபாய் 20 மட்டுமே பெறுகிறார். தோனி நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வொரு முறையும் தோனி அந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறச் செல்லும்போது, தோனியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாகவே, தோனி ஒவ்வொரு முறையும் அந்த கிராமத்திற்கு செல்லும்போது அவர் வண்டியின் உள்ளே இருந்தவாறே மருந்தை குடித்துவிட்டுச் செல்கிறார்.
இந்திய அணிக்கு மூன்று வடிவ உலககோப்பைகளை வென்றுத்தந்த தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டும் அவர் கேப்டனாக தொடர்ந்து ஆடி வருகிறார். அடுத்தாண்டு ஐ.பி.எல். போட்டியிலும் தோனி ஆட உள்ளதால் தற்போது முதல் அவர் தனது உடல்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதுடன், பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஐ.பி.எல். கோப்பையை வென்று சென்னை மண்ணில் மீண்டும் அசத்துவார் என்று காத்திருக்கும் தல தோனியின் ரசிகர்களுக்கு அவர் மூட்டுவலியால் சிகிச்சை பெற்று வருவது வேதனையை ஏற்படுத்தினாலும், அவர் விரைவில் மூட்டு வலி குணமாகி பழைய தோனியாக களத்தில் அசத்துவார் என்று காத்துள்ளனர்.
மேலும் படிக்க : IND vs ENG 5th Test: இங்கிலாந்து டெஸ்ட்டில் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டது ஏன்..? இதுதான் காரணம்..!
மேலும் படிக்க : India Tour of England: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்